July Matha Rasi Palan 2021 Rishapam tamil: ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றி தேடி வரும்
ஜூலை மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் தேடி வரும் அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது. ஜூலை மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.
சென்னை: ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. பண வரவு அதிகரிக்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் மாதமாக உள்ளது.
ஜூலை மாதத்தில் சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் கடக ராசியிலும் சிம்மம், கன்னி ராசியிலும் பயணம் செய்வார். புதன் ரிஷபத்தில் மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார். செவ்வாய் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

முயற்சிக்கு வெற்றி
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே ஜூலை மாதம் உங்கள் ராசிக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது. அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. ராசிநாதன் செவ்வாய் சுக்கிரன் உடன் மூன்றாம் வீட்டில் இணைந்து பயணம் செய்வதால் இளைய சகோதரர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

தன்னம்பிக்கை
சூரியன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் பதவியில் உயர்வு தேடி வரும். அரசு வேலைக்காக படிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பலம் தன்னம்பிக்கை கூடும். அதிகாரப் பதவி கிடைக்கும். 16ஆம் தேதிக்கு மேல் கவனம் தேவை.
குரு பத்தாம் வீட்டில் இருப்பதால் பதவியில் மாற்றம் வரும். காதல் விசயங்களில் கவனம் தேவை.

திடீர் பண வரவு
புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பண வரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணை மூலம் பெருமைகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை கிடைக்கும். புதன் 7ஆம் தேதி இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பணப்புழக்கம் ஏற்படும். 25ஆம் தேதி மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தை மூலம் திடீர் பண வரவு வரும்.

இடமாற்றம்
சுக்கிரன் 17ஆம் தேதி 4ஆம் வீட்டிற்கு செல்கிறார். வீடு மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல காலம் கை கூடி வருகிறது. திருமணம் தொடர்பாக ஜூலை 20ஆம் தேதிக்கு மேல் பேசலாம். மூன்றாம் வீட்டில் செவ்வாய் நீசமாக இருந்தலும் சனியின் பார்வை கிடைப்பதால் முதலீடுகளில் லாபம் கிடைக்கும். சனி ஒன்பதாம் வீட்டில் வக்ரமடைந்து சஞ்சரிப்பதால் இருப்பதால் பாக்கியங்கள் அதிகம் நடைபெறும்.

திடீர் யோகங்கள் வரும்
ராகு ராசியிலும் கேது ஏழாம் வீட்டிலும் இருப்பதால் சின்னச் சின்ன குழப்பங்கள் இருக்கும். குருவும் சனியும் சாதகமாக நிலையில் சஞ்சரிப்பதால் திடீர் யோகங்கள் வரும். மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications