கடக ராசிக்கு தலைக்கு மேல் கத்தி - இந்த இரண்டு விஷயங்களில் அதிக கவனம்
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் கடகம் ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன்
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மை, தீமை இரண்டும் சம அளவில் இருக்கும். உத்யோகம், தொழிலில் லாபம் நன்றாக இருக்கும். வெளிமாநிலம், வெளிநாடு சம்பந்தப்பட்ட முதலீடுகள் அதிகரிக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தெளிவான திட்டமிடல்களால் வியாபாரத்தில் வெற்றிகள் கிடைக்கும்.
ஆளுமைப் பண்பு
புதிய வாய்ப்புகள், ஒப்பந்தம் தேடி வரும். செவ்வாய் மூன்றாம் இடத்துக்கு வருவதால் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். கடந்த கால கஷ்டங்களில் இருந்து வெளியேறி மகிழ்ச்சியான நிலை உருவாகும். விட்டு சென்ற பெயர், புகழ், அந்தஸ்து அனைத்தும் கிடைக்கும். புதன், சூரியன் உங்கள் வீட்டில் பயணிக்கிறார்கள். இதுவும் நல்ல பலன்களை தரும். உங்களின் ஆளுமைத் திறன் நன்கு வெளிப்படும்.
சுப செலவுகள்
தடைபட்ட காரியங்கள் நிவர்த்தியாகும். சுக்கிரன் 11 வது இடமான லாப ஸ்தானத்தில் இருக்கிறார். சுப கிரகம் லாப ஸ்தானத்தில் இருப்பது அற்புதமான பலன்களை கொடுக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவீர்கள்.
பண வரவு
சூரிய பகவானால் லட்சியத்தை நோக்கி ஓடுவீர்கள். அரசு, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போர் ஏற்றம் காண்பார்கள். அரசு தொடர்பான பணிகள் அணுகூலமாகும். அரசு பணி சம்பந்தப்பட்ட முயற்சியில் இருப்போருக்கு வெற்றி கிடைக்கும். குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும்.
உத்யோகம், தொழில்
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இடமாற்றம் ஏற்படும். தொழிலில் அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கான உயர்வு உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். நீண்ட காலமாக திட்டமிட்ட காரியங்களை செய்து மன நிம்மதியடைவீர்கள். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் நிறைவேறும்.
கவனம்
உத்யோகம், தொழிலில் பணிச்சுமை, அலைச்சல் அதிகரிக்கும். தூக்கமின்மை ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வார்த்தைகளில் மிகவும் கவனம் வேண்டும். உங்கள் கருத்தை யாரிடமும் திணிக்க வேண்டாம். அது தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும். குடும்பத்தில் வீண் சண்டைகளை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வதால் பிரிவுகளில் இருந்தும் தப்பிக்கலாம்.
பரிகாரம்
குடும்ப உறவுகளில் அதிக எச்சரிக்கை அவசியம். வீண் விரயம் அதிகம் ஏற்படும். எனவே பணம் செலவு செய்வதில் மிகுந்த கவனம் வேண்டும். யாரையும் நம்பி காரியங்களில் இறங்க வேண்டாம். பங்கு சந்தை முதலீடு வேண்டவே வேண்டாம். ஆரோக்கியத்திலும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீடு அருகில் உள்ள அம்மன் கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
