ஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்
2020 ஆம் ஆண்டின் ஆறாவது மாதம் ஜூன். கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்துடனேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தினால் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் க
சென்னை: 2020ல் கொரோனா வைரஸ் பீதியால் உலக பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரமும் தடுமாறுகிறது பலருக்கும் வேலையிழப்பு வருமானமில்லை என பிரச்சினையில் சிக்கியிருக்க பிறக்கப் போகும் ஜூன் மாதத்தில் கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களின் நிதி நிலைமை, ஆரோக்கியம் குடும்ப நிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார், மிதுனம் ராசியில் ராகு, ஆட்சி பெற்ற புதன், தனுசு ராசியில் கேது மகரம் ராசியில் சனி வக்ரம், குரு வக்ரம், கும்பம் ராசியில் செவ்வாய், கன்னி ராசியில் சந்திரன் என மாதம் ஆரம்பிக்கிறது.
ஜூன் 14ஆம் தேதி சூரியன் மிதுனம் ராசிக்கு மாறி ராகு, புதனோடு இணைகிறார். 18ஆம் தேதி செவ்வாய் மீனம் ராசிக்கு நகர்கிறார். மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ர ஆரம்பமாகிறது. ஜூன் 25ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் முடிகிறது. ஜூன் 29ஆம் தேதி தனுசு ராசியில் கேது உடன் இணைகிறார் குரு பகவான். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

சவாலான மாதம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் பல அற்புதங்கள் நிகழப்போகிறது. சூரியன் சுக்கிரன் கூட்டணியால் சில சந்தோஷமான விசயங்கள் நடந்தாலும் வேலை, தொழிலில் சில சவால்கள் வரலாம். அதை சாமர்தியமாக சமாளிப்பீர்கள். ஏழரை சனி நடந்தாலும் சனி வக்ரமடைவதால் சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். வேலையில் சில பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள். குருபகவானின் வக்ர சஞ்சாரம் பார்வையால் சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடக்கவும். சிலருக்கு தன லாபம் கிடைக்கும். பயணங்களில் கவனமாக இருங்க. வேலை செய்யும் இடத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

தொழில் வேலை
நீண்ட நாள் கழித்து பிசினஸ் தொய்வின்றி போகும் சிலருக்கு லாபம் கிடைக்கும். சுக்கிரன் வக்ரமடைந்திருப்பதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. விழிப்புணர்வும் அவசியம். சுக்கிரனை குரு பார்ப்பதால் நன்மை. வக்ரமான குருவினால் புதிய வேலை, இடமாற்றம் ஏற்படும். லாப ஸ்தானத்தில் கேது இருப்பதால் திட்டமிடாத செயல்கள் எதிர்பாராமல் நடக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது செழிப்பான காலம் என்றாலும் ராகு, புதனோடு சூரியன் இணைவதால் தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.

குடும்பத்தில் குதூகலம்
மாத இறுதியில் செவ்வாய் இடமாற்றம் புத்திக்கூர்மையை அதிகரிக்கச்செய்யும். ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் 4ல் இருந்து 5ஆம் வீட்டிற்கு நகர்வது நன்மைதான். மாணவர்கள் யோசித்து முடிவு செய்யுங்கள். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை சரியாக தேர்வு செய்வீர்கள். ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கும். வீட்டை நிர்வாகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிதாக திருமணமான கும்பராசிக்கார தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் தேடி வரும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும் மாத பிற்பகுதியில் பிசினசில் நல்ல லாபம் கிடைக்கும்.

தைரியம் தரும் மாதம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதத்தில் உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்க ரொம்ப விழிப்புணர்வோட இருக்கணும் இல்லைன்னா உங்க மேலே தேவையில்லாத பழி வந்துடும். உடல் ஆரோக்கியம் சாதாரணமாக இருந்தாலும் உணவு விசயத்தில கவனமாகவும் கட்டுப்பாடுடனும் இருக்கணும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

வியாபாரத்தில் லாபம்
உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையும் பொருளாதார சூழ்நிலையும் நன்றாகவே இருக்கும். திடீர் பண வருமானம் உங்க வங்கி சேமிப்பையும் பொருளாதார முன்னேற்றத்தையும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வேலை நல்ல இடத்தில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.

திருமண வாழ்க்கை
குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாட்கள் சொல்ல முடியாமல் தவித்த காதலை சொல்லிவிடுவீர்கள். காதல் பயணங்களை வெற்றிகரமாக தொடங்குவீர்கள். சிலருக்கு திருமணம் கைகூடி வரும். சுப காரிய முயற்சிகள் வெற்றியை தேடித்தரும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. ஒருமுறைக்கு இருமுறை தெளிவாக புரிந்து படிங்க தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளலாம்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications