Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் மாதம் ராசி பலன் 2020 - மிதுனத்திற்கு பிரச்சினையில்லை.. கடகம் ரொம்ப கவனம்

2020 ஆம் ஆண்டின் ஆறாவது மாதம் ஜூன் பிறக்கப் போகிறது. கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்துடனேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தினால் மிதுனம் மற்றும் கடகம் ராசிக்காரர்களுக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து உலகம் முழுவதுமே பிரச்சினைதான். கொரோனா வைரஸ் பீதியால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு உலக பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. பிறக்கப் போகும் ஜூன் மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகள் தீரும் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடகம் ராசிக்காரர்களுக்கு நெருக்கடிகள் நீடிப்பதால் ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கிறது.

ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார், மிதுனம் ராசியில் ராகு, ஆட்சி பெற்ற புதன், தனுசு ராசியில் கேது மகரம் ராசியில் சனி வக்ரம், குரு வக்ரம், கும்பம் ராசியில் செவ்வாய், கன்னி ராசியில் சந்திரன் என மாதம் ஆரம்பிக்கிறது.

ஜூன் 14ஆம் தேதி சூரியன் மிதுனம் ராசிக்கு மாறி ராகு, புதனோடு இணைகிறார். 18ஆம் தேதி செவ்வாய் மீனம் ராசிக்கு நகர்கிறார். மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ர ஆரம்பமாகிறது. ஜூன் 25ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் முடிகிறது. ஜூன் 29ஆம் தேதி தனுசு ராசியில் கேது உடன் இணைகிறார் குரு பகவான். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் மிதுனம் மற்றும் கடகம் ராசிக்கு என்னென்ன சாதக பாதகங்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.

பிரச்சினைகள் தீரும்

பிரச்சினைகள் தீரும்


மிதுனம் ராசிக்காரர்களே நிறைய துன்பங்கள், நிதி நிலையில் நெருக்கடி என அல்லல்பட்டு வந்தீர்கள் இனி பிரச்சினைகள் நீங்கும். சனி எட்டாம் வீட்டில் வக்ரமாக இருப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் நெருக்கடிகள் வரலாம் என்றாலும் பாதிப்புகள் நீங்கும். இந்த மாதம் பிற்பகுதியில் ராகு சூரியன் இணைவால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கங்க.
சகோதரர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகும், குருவின் பார்வை மீண்டும் உங்க ராசிக்கு கிடைக்கப் போகிறது. தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

சக்தி தரும் ராகு

சக்தி தரும் ராகு

இந்த மாதத்தில் உள்ள ராசியில் உள்ள ராகு உடன் புதன் இணைந்திருப்பார். ராகு மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுப்பார். புத்தி காரகன் புதன் ராகுவுடன் இணைந்து உங்களுக்கு சக்தியை கொடுப்பார். முயற்சியை கை விடாதீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில், வெளிநாடு தொழில் செய்பவர்களுக்கு புதன் ராகு கூட்டணி வெற்றியை தேடித்தரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை

ஆரோக்கியத்தில் அக்கறை

சுக்கிரன் சஞ்சாரத்தினால் இந்த மாதம் சந்தோஷம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழும் உங்களுக்கு மேலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்ப வாழ்க்கை, காதல், திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதம் எதையும் செய்யாதீர்கள். கணவன் மனைவி இடையே வாக்கு வாதம் செய்யாதீங்க. நம்முடைய வேலையில் சில இடைஞ்சல்கள் வரலாம். சூடாமணி சூரிய கிரகணம் மிதுனம் ராசி மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. மாத இறுதியில் எச்சரிக்கையாக இருங்க.

வேலையில் கவனம்

வேலையில் கவனம்

கடகம் ராசிக்காரர்களுக்கு மாத முற்பகுதியில் சூரியன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல மாதம். சிலருக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். குரு நீச்சமடைந்து வக்ர நிலையில் இருக்கிறார். சில பாதிப்புகள் வரலாம். வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கும். தொழில் முதலீடுகளில் கவனமாக முதலீடு பண்ணுங்க இது சவாலான மாதகமாக இருக்கும். உங்க ராசிக்கு எப்பவுமே நன்மை செய்யக்கூடிய செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கவனமாக இருங்க. வேலை தேடும் இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சனியால் பிரச்சினை

சனியால் பிரச்சினை

ஏழாம் வீட்டில் சனி இருந்து உங்க வீட்டை பார்ப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. பிசினஸ் பார்ட்னர்களிடம் பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. வியாபாரிகள், தொழிலதிபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். செவ்வாய் பகவான் ஜூன் 18 ஆம் தேதிக்கு மேல் பெயர்ச்சியாகி மீனம் ராசிக்கு செல்கிறார். சனியின் பார்வை மீனம் ராசியின் மீதும் விழும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் எந்த சாதகமான பலன்களும் கிடைக்காது. சனி பகவான் சஞ்சாரம் பார்வையால் சில சங்கடங்கள் வரலாம் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் கவனமாக இருங்க. புதிய வேலை தேடுபவர்களுக்கு இது சரியில்லாத கால கட்டமாக இருக்கிறது. இருக்கிற வேலையை விட்டு விட வேண்டாம்.

படிப்பில் அக்கறை தேவை

படிப்பில் அக்கறை தேவை

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். படிப்பில் கவனமாக இருங்க. எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். தன்னம்பிக்கையோட படிங்க வெற்றிகள் உங்களை தேடி வரும். சிலருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும் தடைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு இந்த கொரோனா லாக் டவுன் காலத்தில் சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். பொறுமையாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கங்க. புதன் வக்ரம் பெற்றாலும் உங்களுக்கு நன்மைதான். வியாபாரிகளுக்கு லாபமும் முன்னேற்றமும் வரும். பெண்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புரமோசன் கிடைக்கலாம். வீட்டிலும் செல்வாக்கு அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+