ஜூன் மாதம் ராசி பலன் 2020 - சிம்மம் உற்சாகம்... கன்னி ஆரோக்கியத்தில் கவனம்
2020 ஆம் ஆண்டின் ஆறாவது மாதம் ஜூன் பிறக்கப் போகிறது. கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்துடனேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தினால் சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு
சென்னை: 2020ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து உலகம் முழுவதுமே பிரச்சினைதான். கொரோனா வைரஸ் பீதியால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு உலக பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. பிறக்கப் போகும் ஜூன் மாதத்தில் சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை, ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார், மிதுனம் ராசியில் ராகு, ஆட்சி பெற்ற புதன், தனுசு ராசியில் கேது மகரம் ராசியில் சனி வக்ரம், குரு வக்ரம், கும்பம் ராசியில் செவ்வாய், கன்னி ராசியில் சந்திரன் என மாதம் ஆரம்பிக்கிறது.
ஜூன் 14ஆம் தேதி சூரியன் மிதுனம் ராசிக்கு மாறி ராகு, புதனோடு இணைகிறார். 18ஆம் தேதி செவ்வாய் மீனம் ராசிக்கு நகர்கிறார். மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ர ஆரம்பமாகிறது. ஜூன் 25ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் முடிகிறது. ஜூன் 29ஆம் தேதி தனுசு ராசியில் கேது உடன் இணைகிறார் குரு பகவான். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் சிம்மம் மற்றும் கன்னி ராசிக்கு என்னென்ன சாதக பாதகங்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.

வேலை மாற்றம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும் புதிய வேலைகள் மாறாலாமா என்று யோசிப்பீர்கள். இப்ப இருக்கிற பொருளாதார சூழ்நிலையில் நாம் பார்க்கிற வேலை நிரந்தரமாக இருக்குமா? இதை விட நல்ல வேலைக்கு நிறைய சம்பளம் வரக்கூடிய வேலைக்கு மாறாலாமா என்ற யோசனையில் இருப்பீர்கள். சூரியனும் சுக்கிரன் பத்தாம் வீட்டில் இணைந்திருப்பதால் வேலை பற்றி பல விதமாக யோசிப்பீர்கள். மார்க்கெட்டிங் துறை, கடை வியாபாரம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல லாபம் வருமானம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம். நிறைய நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம்.

பிள்ளைகளிடம் கவனம்
14ஆம் தேதிக்கு மேல் சூரியன் இடப்பெயர்ச்சியாகி புதனோடு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம் படிப்பில் உற்சாகமாக இருப்பீர்கள். தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்கள் புரிந்து படிப்பீங்க. குரு வக்ரமடைந்து பின்னோக்கி வருவதால் சுப காரிய தடைகள் ஏற்படும் என்பதால் நல்ல விசயங்களை பேச இது உகந்த நேரமில்லை. பிள்ளைகளால் சில தொல்லைகள் வரலாம். நிறைய செலவுகள் வரலாம் கவனமாக இருங்க. ஆறாம் வீட்டில் சனி வக்ரமடைந்திருப்பதால் எதிரிகள் தொல்லை நீங்கும். எதிரிகளால் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

விபத்துகள் கவனம்
செவ்வாய் 18ஆம் தேதி வரை ஏழாம் வீட்டில் இருக்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். மாத பிற்பகுதியில் செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு நகர்வதால் பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கூர்மையான பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர் விபத்துக்கள் வரலாம் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க நிதானமாக இருங்க. வாழ்க்கையை பற்றி புரிதல் ஏற்படும். மாத பிற்பகுதியில் கிரகங்களின் மாற்றத்தினால் வேலையிலும் வீட்டிலும் நிதானமாகவும் கூடுதல் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய கால கட்டம் இது.

அதிர்ஷ்டமான மாதம்
ஜூன் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு மனம் ஊசலாட்டத்திலேயே இருக்கும். ராகு உடன் இணைந்த புதன் வேலையில் நல்ல மாற்றத்தை தருவார். நிறைய வருமானம் கிடைக்கும். சுக்கிரனால் அதிர்ஷ்டம் தேடி வரும் உங்க குடும்பத்திற்கான தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்திற்கு சுப செலவுகள் வரலாம். மாத பிற்பகுதியில் சூரியன் புதனோடு இணைவதால் வேறு வேலை மாறாலாமா என்ற யோசனை வரும்.

வேலையில் குழப்பம்
புதன் ராகு வோடு இணைந்திருப்பதால் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க வேகமாக போகாதீங்க.
மாணவர்களுக்கு குழப்பமான மனநிலை இருக்கலாம் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்துங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. வக்ரமடைந்த சனியால் மனதளவில் சில குழப்பத்தையும் நிரந்தரமில்லாத நிலையையும் ஏற்படுத்தும்.

ஆரோக்கியத்தில் கவனம்
செவ்வாய் ஆறாம் வீட்டில் இருந்து பார்க்கிறார். மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டில் இருந்தும் பார்ப்பதால் கணவன் மனைவி இடையே பேசும் போது கவனமாக இருங்க. புது முயற்சிகள் எதையும் இந்த மாதம் செய்யாதீங்க. குரு பகவான் உங்களின் எதிர்காலத்தை பற்றி யோசிக்க வைப்பார். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. அஜீரண பிரச்சினைகள் வரலாம் வயிறு கோளாறு, வாய்வு தொந்தரவுகள் வரலாம். காரமான எண்ணெய் பலகாரங்களை சாப்பிட வேண்டாம். இரவு நேரங்கடந்து சாப்பிடாதீங்க. சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications