ஜூன் மாத ராசி பலன் 2021 : இந்த ராசிக்காரர்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்
ஜூன் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும். சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் பண வருமானம் வருமா? தொழில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும
சென்னை: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது இந்த கால கட்டத்தில் நூற்றுக்கு நூறு உண்மையாகி வருகிறது. கோடீஸ்வர நோயாளியாக வாழ்வதை விட ஆரோக்கியமாக நோய்கள் எதுவுமின்றி வாழ்பவரே இன்றைக்கு செல்வந்தர்கள். ஜூன் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும். சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் பலன்கள் எப்படியிருக்கும் பண வருமானம் வருமா? தொழில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும், நோய்களால் பிரச்சனை வருமா என்று பார்க்கலாம்.
Recommended Video
ஜூன் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகளில் பயணம் செய்கிறார். மாத ஆரம்பத்தில் மிதுன ராசியில் வக்ரம் அடைந்த புதன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிக்க விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் வக்ரமடைந்த சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
கிரகங்களின் இடமாற்றத்தை பார்த்தால் செவ்வாய் இடப்பெயர்ச்சி ஜூன் 2ஆம் தேதி நிகழ்கிறது. கடக ராசியில் நீச்சமடைந்து பயணம் செய்கிறார் செவ்வாய். ரிஷப ராசியில் புதன் ராகு உடன் பயணிக்கிறார். சூரியன் ஜூன் 15ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி சுக்கிரன் உடன் இணைகிறார். 20ஆம் தேதி குரு வக்ர காலம் ஆரம்பமாகிறது. ஜூன் 22ஆம் தேதி புதன் வக்ர சஞ்சாரம் முடிகிறது. சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி நீச்சம் பெற்ற செவ்வாய் உடன் இணைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி சஞ்சாரத்தினால் ஜூன் மாதத்தில் இந்த நான்கு ராசிகளின் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும், நோய்களால் எதிரிகளால் தொல்லைகள் வருமா? என்று பார்க்கலாம்.

சிம்மம்
சூரியன் ஆதிக்கம் நிறைந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு சிம்மம் பத்தாம் வீட்டில் இருக்கிறார். மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். தனம், குடும்பம், வருமானம், வேலை அனைத்தும் சிறப்பானதாக இருக்கும். சுக்கிரனும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் செய்யும் தொழில் லாபம் இருக்கும். 15ஆம் தேரி சூரியன் லாப ஸ்தானத்தில் உள்ள சுக்கிரனுடன் இணைகிறார். உங்களின் சக்தி அதிகரிக்கும். உடல் பலம் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி பகவான் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தான அதிபதி சுக ஸ்தான அதிபதியுமான செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்தில் நீச்சமடைந்து சனி பார்வை பெறுகிறார். இதனால் குடும்பத்தில் பெற்றோர்கள், சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சனி பகவான் ஆறாம் வீட்டில் இருந்து செவ்வாய் பகவானை பார்வையிடுவதால் கவனம் தேவை. குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் பொருளாதார ரீதியான ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். ஜூன் மாதத்தில் உங்களுக்கு நோய்கள் நீங்கும், திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். புத்திர பாக்கியம் கைகூடி வரும். நல்ல பலன்கள் அதிகம் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது. தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும் நோய் பாதிப்புகள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, புத்திசாலித்தனமும் அறிவாளிகளாகவும் உள்ளவர்கள் நீங்கள்தான். உங்களுக்கு வரும் கஷ்டங்கள், சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். காலச்சக்கரத்திற்கு 6வது ராசி கன்னி ராசி என்பதால் அதிக எதிர்ப்புகளை சாதாரணமாகவே சந்திக்க வேண்டியிருக்கும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. பாதகம் ஏற்படுத்தும் கிரகங்கள் எல்லாமே சாதகமாக உள்ளது. இந்த மாதம் புதன் சுக்கிரன் வீடுகள் மாறி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் யோகம் அதிர்ஷ்டம் தேடி வரும். பண வரவு தேடி வரும். தொழில் விசயமாக நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 8ஆம் அதிபதி, மூன்றாம் வீட்டு அதிபதியும் ஆவார். இந்த மாதம் லாப ஸ்தானத்தில் செவ்வாய் நீச்சம் பெற்று மறைவதால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல இந்த மாதம் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கை கூடி வரும். 5ஆம் வீட்டில் சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ரமடைந்துள்ளார். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் தேடி வரும். குரு பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களுக்கு வரப்போகும் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். விநாயகப் பெருமானை செவ்வாய்கிழமை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இந்த மாத ஆரம்பத்தில் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு. சூரியன், புதன் மாத முற்பகுதியில் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை, இந்த மாதத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு நோய் பாதிப்புகள், பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நன்மைகள் அதிகம் நடைபெறும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். சந்திரன் சஞ்சாரமும் சாதகமாக உள்ளதால் திடீர் அதிர்ஷ்டம் வரும். சனிபகவான் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் சூரியன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தடைகளை தாண்டி சாதிப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினை தீரும். பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய மாதம். வேலை தொடர்பாக உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இந்த மாதம் சொத்து வண்டி வாகனம் எதுவும் வாங்க முயற்சி செய்ய வேண்டாம் ஒத்திப்போடவும். திருமணம் சுப காரியம் தொடர்பாக மாத பிற்பகுதியில் பேச நன்மைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடவும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இதுநாள் வரை எட்டாம் வீட்டில் சஞ்சரித்து வந்த ராசி நாதன் செவ்வாய் இந்த மாதம் ஆரம்பத்திலேயே 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி நீச்சமடைந்து பயணம் செய்கிறார். மூன்றாம் வீட்டில் சனி வக்ரகதியில் பயணம் செய்கிறார், நான்காம் வீட்டில் குரு மாத பிற்பகுதியில் வக்ரமடைந்து சஞ்சரிப்பார். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக பெற்றோர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். திடீர் சுப செலவுகள் வரலாம். சூரியன் மாத முற்பகுதியில் ஏழாம் வீட்டில் ராகு உடன் சூரியன் பயணம் செய்கிறார். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது நிதானம் தேவை விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம்.குரு உங்க குடும்ப ஸ்தான அதிபதி வக்ரமடைவது சிறப்பானதாக இல்லை. கூடுதல் விழிப்புணர்வு தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டவேண்டும். பயணங்களில் அதிக கவனம் தேவையிருக்கும். கூடுமானவரை பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. காதல் விவகாரங்களில் சில பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். விட்டுக்கொடுத்து செல்லவும். இந்த மாதத்தில் அதிக எதிர்பார்ப்பு எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம். அமைதியும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படும் மாதமாக அமைந்துள்ளது. திருமண சுப காரியங்கள் தொடர்பாக இந்த மாதம் எதுவும் பேச வேண்டாம் தள்ளிப்போடலாம்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications