ஜூன் மாத ராசி பலன் 2022.. குரு மங்கள யோகத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் நீங்கதான்
ஜூன் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு குரு மங்கள யோகத்தால் ஏற்படப்போகும் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் பார்க்கலாம்.
சென்னை: ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு யோகம் ஏற்படும். ஜூன் மாதம் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான யோகங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சந்திரன், மீன ராசியில் குரு, செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
ஜூன் 3ம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. ஜூன் 5ம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி, ஜூன் 15ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜூன் 18ல் ரிஷபத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி, ஜூன் 27ல் செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

கன்னி
அன்பான கன்னி ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. ஏழாம் வீட்டில் குருவும் செவ்வாயும் இணைந்து சம சப்தமாக பார்ப்பது குரு மங்கள யோகம். சூரியன் பத்தாம் வீட்டிற்கு வருகிறார். பத்தில் சூரியன் பதவி உயர்வைத் தரப்போகிறார். ராசி அதிபதி புதன் பயணமும் சாதகமாக உள்ளதால் தடைகள் நீங்கி காரிய வெற்றி உண்டாகும். குரு பலன் கை கூடி வந்துள்ளதால் காதல் திருமண யோகமும் கை கூடி வரும்.

பணம் பத்திரம்
சுக்கிரன் ராகு உடன் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் எதிர்பாலினத்தவர்களுடன் பேசும் போது கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்கள் பணத்தை பத்திரமாக வைக்கவும். வருமானம் அதிகரித்தாலும் சின்னச் சின்ன தடைகள் வந்து நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வாக்கில் கேது உள்ளதால் புதிதாக வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

திருமண வாழ்க்கை
சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகும் போது மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் எட்டாம் வீட்டிற்கு வரப்போவதால் திருமண வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பிரச்சினைகள் வந்தாலும் எதையும் எளிதாக எதிர்கொள்வீர்கள். பெண் தொழில் முனைவோர்கள் கவனம். தகவல் தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும்.

கல்வியில் முன்னேற்றம் வரும்
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். தொழிலில் இடப்பெயர்ச்சி உண்டாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாத பிற்பகுதியில் சுப செய்திகள் தேடி வரும். புத்திர பாக்கியம் தேடி வரும். படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிரிகளிடம் கவனமும் எச்சரிக்கையும் தேவை. முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட சண்டை சச்சரவுகள் நீங்கும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications