ஜூன் மாத ராசி பலன் 2023: கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி..கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
சென்னை: ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசியில் பயணம் செய்வார். வைகாசியும் ஆனியும் இணைந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் நிறைந்த மாதம். தென்மேற்கு பருவமழை அட்டகாசமாக ஆரம்பிக்கும் மாதம் ஜூன் மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்கள் மேஷ ராசியில் இருந்து வரிசையாக பயணம் செய்கின்றன. குரு, ராகு மேஷத்திலும், ரிஷபத்தில் புதன் சூரியன், கடகத்தில் செவ்வாய் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களின் பயணம் பார்வையால் மகரம் மற்றும் கும்பம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மகரம்: உங்களுக்கு நவ கிரகங்களும் சாதகமாக இருப்பதால் வேலையில் சிக்கல் இன்றி இருக்கும். பண வருமானம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கல்யாண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை கூடும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

வேலைப்பளு: மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் பாத சனி காலமாக இருப்பதால் எதையும் வெளிப்படையாக யாரிடமும் சொல்லாமல் கில்லி மாதிரி வெற்றிகரமாக முடிங்கள். உங்கள் மீது பலரது பார்வை இருக்கிறது. கண் திருஷ்டிகள் அதிகரிக்கும். மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல நன்மைகள் நடைபெறப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. நான்காம் வீட்டில் உள்ள குரு ராகு மீது சனி பார்வை விழுவதால் வேலை பளு அதிகரிக்கும். திடீர் தலைவலியும் அதனால் மன அழுத்தமும் கூடும்.
மன அழுத்தம்: இல்லத்தரசிகளுக்கு நிறைய வேலைப்பளு கூடும். பண வருமானம் அதிகரிக்கும். நகை, ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பல விசயங்களில் குடும்பத்தில் நாம் சொல்வதை யாருமே கேட்கவில்லையே என்ற எண்ணம் மனதளவில் உங்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தும் ஈசியாக சமாளித்து விடுவீர்கள். சனி பகவான் இந்த மாதம் வக்ரமடைவதால் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தடைபட்டிருந்த காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திடீர் பயணங்கள் செல்லும் மாதமாக ஜூன் மாதம் அமைந்துள்ளது.
கும்பம்: நவ கிரகங்களின் பயணம் சுமாராகவே இருப்பதால் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காதீர்கள். வேலையில் இருந்து வெளியேற நினைக்காதீர்கள். இருப்பதை தக்கவைத்துக்கொள்ளுங்கள். குருவின் பார்வை சாதகமாக இருந்தாலும் திருமணம் சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டு பின்னர் சுபமாக முடியும். ஜென்ம சனி காலம் என்பதால் இடையூறுகள் அதிகம் ஏற்படுவதால் சவால்களை சமாளிப்பீர்கள்.

சுப விரைய செலவுகள்: குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை பொறுமையாக கையாளுங்கள். உடல் ரீதியாக உற்சாகமாக இருப்பீர்கள் மனதளவில் மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்து கொண்டிருப்பீர்கள். புதன்பகவான் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்காதீர்கள். மாணவர்களுக்கு ஜூன் மாதம் நினைத்த கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கவில்லையே என்ற கவலை இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் படித்து முன்னேறுகள்.
செயல்களில் கவனம்: ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் கல்வி கடனுக்காக முயற்சி செய்வீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் எந்த ஒரு விசயத்தையும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாதீர்கள். எதையும் எளிதாக கடந்து விடுங்கள். கோபத்தோடு பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். இல்லத்தரசிகள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். ஆறாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் இணைந்திருப்பதால் உணவு விசயத்தில் கவனம் தேவை. மொத்தத்தில் ஜூன் மாதம் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டிய மாதமாக அமைந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications