ஜூன் மாத ராசி பலன் 2023: தொட்டது துலங்கும்..எந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம்?
சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கப்போகும் அற்புதமான மாதம் ஜூன் மாதம். இந்த மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசியில் பயணம் செய்வார். வைகாசியும் ஆனியும் இணைந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் நிறைந்த மாதம். ஜூன் மாதம் கிரகங்கள் மேஷ ராசியில் இருந்து வரிசையாக பயணம் செய்கின்றன. குரு, ராகு மேஷத்திலும், ரிஷபத்தில் புதன் சூரியன், கடகத்தில் செவ்வாய் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களின் பயணம் பார்வையால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பயணம் சாதகமாக உள்ளது. ஜூன் மாதம் அற்புதமான மாதம். ராசியில் குரு ராகு சேர்க்கை திடீர் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. எதிர்மறை எண்ணங்கள் செயல்கள் நீங்கும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இரண்டாம் வீட்டில் புதன் சூரியன், நான்காம் வீட்டில் சுக்கிரன் செவ்வாய், லாப வீட்டில் சனி பயணம் செய்கிறார். சூரியன் மாத பிற்பகுதியில் 3ஆம் வீட்டிற்கு சென்று விடுவார். 18ஆம் தேதி புதன் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். செவ்வாய் பகவான் நான்காம் வீட்டில் நீச்சமடைந்துள்ளார். நான்காம் வீட்டில் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. மாத இறுதியில் சந்திரன் செவ்வாயுடன் இணைந்து சந்திர மங்கல யோகத்தையும் சில நாட்களில் நீச்ச பங்க ராஜயோகம், பரிவர்த்தனை யோகத்தையும் கொடுப்பார். ராசிநாதன் செவ்வாய் பலவீனத்துடன் இருப்பதால் மன உறுதியில் சில குழப்பம் உண்டாகும். குடும்பத்தினருடன் இணைந்து செயல்பட வேண்டும்.
லாப ஸ்தானத்தில் உள்ள சனிபகவான் இந்த மாதம் வக்ரமடைகிறார். உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மளமளவென வேலைகள் முடியும். சனிபகவான் லாபத்தில் பயணம் செய்து வக்ரமடைந்தாலும் சிறப்பு. சனி செவ்வாய் பார்வையால் சில பதற்றம் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். காதல் உறவுகள் உருவாகும். குருவின் பார்வையும் சாதகமாக உள்ளது. புதன் இடப்பெயர்ச்சியாகி சூரியனுடன் இணைந்து பயணம் செய்து புத ஆதிபத்திய யோகத்தை கொடுக்கிறார்.
புதிய வேலைக்கு முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மாத பிற்பகுதியில் மூன்றாம் வீட்டில் சூரியனுடன் ஆட்சி பெற்ற புதன் இணைகிறார். அப்பா வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்
மாணவர்களுக்கு கல்வியில் புதிய உற்சாகத்தையும் தெளிவையும் கொடுக்கும்.மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். மன உளைச்சல் நீங்கும். குரு ராகு சேர்ந்திருப்பதால் கொஞ்சம் உடல் சோர்வை கொடுக்கும். பெண்களுக்கு மன அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். கோபப்பட்டு பேசாதீர்கள். எதிர்பார்த்த விசயங்கள் தடைகளை தாண்டி நடைபெறும். வயதானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இந்த மாதம் இறை வழிபாடு உங்களுக்கு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. ஆன்மீக பயணங்கள் செல்லுங்கள். பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று வணங்குவது தோஷங்களை நிவர்த்தியாக்கும். ஜூன் 2 வைகாசி விசாகம் நாளில் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கலாம் சுப காரிய தடைகள் நீங்கும். வேலை வாய்ப்பு அற்புதமாக உள்ளது. உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் பொற்காலம் தேடி வரப்போகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications