ஜூன் ராசி பலன்: மகர ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. அதிர்ஷ்டம் கொட்டும்.. கூடவே வருது ஆபத்து
ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை 29 ஆம் தேதி மேஷத்தில் உள்ள சுக்கிர பகவான் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ஆனி 15 ஆம் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே குரு மற்றும் புதன் பகவான்கள் உள்ளனர். புதன் பகவான் 22 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் உள்ளனர்.

ஜூன் 7 ஆம் தேதி ஏகாதசி, 8, 23 தேதிகளில் பிரதோஷம் வருகிறது. 25 ஆம் தேதி அமாவாசை உள்ளது. மேலும் பஞ்சாங்கப்படி இந்த மாதத்தில் ஆந்திராவிலே புயல் மழை, நம் எல்லையில் பதற்றம் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் மகர ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான காதல் வாழ்க்கை காத்திருக்கிறது. படிக்கும் இடத்தில், வேலை செய்யும் இடத்தில் காதல் மலரக் கூடிய யோகம் உண்டாகும். சுக்கிரன் 5 ஆம் இடத்துக்குப் போவதால் காதல் கைகூடும். காதல் விஷயங்கள் கல்யாணமாக மாறும். லிவிங் ரிலேஷன்ஷிப்பில் உள்ளவர்களுக்கும் திருமணமாகும் சூப்பரான காலகட்டமாக இருக்கும்.
குழந்தை பாக்கியம்
ஆறாம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் குழந்தை இல்லாதவர்கள் சிகிச்சை பெறுவதற்கு அருமையான நேரமாக இருக்கும். குழந்தை இல்லாதவர்கள் தங்களின் ஜாதகத்தைப் பார்த்து பரிகாரம் செய்து கொள்வது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மாதாமாதம் மருத்துவ சிகிச்சைகளை சரியாகப் பார்த்துக் கொள்வது நன்மையைத் தரும்.
வேலைவாய்ப்பு
புதன் பகவான் ஆறாம் இடத்தில் ஆட்சியாக அமர்ந்துள்ளதால் இளைஞர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு கட்டாயம் கிடைக்கும். அதில் நல்ல சம்பளமும் வரும். எதிர்பார்த்த வேலை கட்டாயம் கிடைக்கும். சனி பகவான் உபஜெய ஸ்தானத்தில் இருப்பதால் இன்டர்வியூக்களில் வெற்றிகள் உண்டாகும். அதன் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
நிதி
ஆறாம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். மறைவு ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் பணத்தின் பெருமை குறித்து வெளியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. சிட் பண்டுகளில் சீட்டு போடுவதை தவிர்ப்பது நல்லது. முதலீடு விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பாதுகாப்பான இடத்தில் பணத்தை முதலீடு செய்வது நல்லது. அதிக கடன் வாங்காமல் இருப்பது நன்மை பயக்கும். கடன் வாங்கி செலவழித்தால் மிகுந்த சிக்கலுக்குள் சிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
ஆரோக்கியம்
ஆறாம் இடத்தில் குரு இருப்பதால் உணவு விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வயிறு பிரச்சனையால் தோல் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே, உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
மாணவர்கள்
ஆறாம் இடம் மற்றும் 9 ஆம் இடத்துக்கு அதிபதி புதனாக இருப்பதால் பள்ளிப் பருவத்தில் சரியாகப் படிக்கவில்லை என்றாலும் உயர்கல்வியில் சூப்பரான வாய்ப்புகள் வரும். போட்டித் தேர்வுகளில் வெல்வதற்கான வாய்ப்புள்ளது. சிஏ படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கட்டாயமாக வளர்ச்சிகள் வந்து சேரும். புரொபஷனல் கோர்ஸ் எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.
4 ஆம் இடத்துக்கு அதிபதியான செவ்வாய் பகவான். 10, 12 ஆம் படிக்கும் மாணவர்கள் கூடுதல் நேரம் கண் விழித்து படிப்பது நல்லது. மாணவிகளுக்கு அமோகமான மதிப்பெண்கள் வரும்.
பெண்கள்
மகர ராசி பெண்களைப் பொருத்தவரை 5, 10 ஆம் இடத்துக்கு அதிபதியாக சுக்கிரன் இருப்பதால் யோகம் செய்தவர்களாக இருப்பார்கள். வீட்டில் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி பூஜை செய்ய செய்ய கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் வளர்ச்சி முன்னேற்றத்தைக் காண்பார்கள். சுக்கிர பகவானின் அனுகூலத்தால் உங்கள் பெயரில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான உபயோகப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்.
கவனம்
செவ்வாய் 7 இல் நீச்சமாக இருப்பதால் நண்பர் ஒருவரால் கெட்டபெயர் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. அவர் தப்பித்துக்கொண்டு உங்களை மாட்டிவிடும் வாய்ப்புள்ளது. கவனமாக இருப்பது நல்லது. உங்களுடைய நண்பர்கள் வம்பு, வழக்குகளில் சிக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளதால் பார்த்து நடந்துகொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications