ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்..ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம்
ஜூன் மாத பலன்: ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஏற்படக்கூடிய கிரக மாற்றங்கள், கோச்சாரங்களின் அடிப்படையில், மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் நிகழப் போகும் மாற்றங்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, சச்சரவு, வீண் வாக்குவாதம், பல், கண் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றை சந்தித்து வந்திருப்பீர்கள். பேச்சை முடக்குவது போன்ற விஷயங்கள், கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்டு வந்த ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் ஜூன் 16 ஆம் தேதிக்குப் பிறகு நீங்கும்.

ஆரோக்கியம்
அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம், எழுத்து, ஓவியம் தொடர்பான விஷயங்களில் 100 சதவீதம் நன்மைகளையும், வெற்றிகளையும் பெறுவீர்கள். ஹார்மோன் இம்பேலன்ஸ், மாதவிடாய் கோளாறுகளால் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வயிற்றுக்கு மேல் நெஞ்சுக்கு கீழ் எரிவது, அல்சர் போன்றவற்றை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. கடந்த இரண்டரை மாதங்களாக சந்தித்து வந்த அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கி நிம்மதியைப் பெறுவீர்கள்.
பண வரவு அதிகரிக்கும்
சுக்கிர பகவான் ராசியில் அமர்ந்து மாதத்தை ஆரம்பிப்பதால் மாதம் முழுவதும் நல்ல பணவரவு அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தை நடத்துவதற்கு, தொழிலை நடத்துவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பண வசதிகள் எல்லாம் கிடைக்கும். சனி பகவான் விரையமாக இருந்தால் இந்த மாதத்தில் வேலை மாற்றம் உண்டாகும்.
அடுத்தடுத்து மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழிலை ஆரம்பிப்பதற்கான யோகமான காலகட்டமாக இருக்கும். சுக்கிரனின் அருளால் திருமண யோகம் கூடி வரும். மாணவர்களுக்கு விரும்பிய படிப்பு, துறைகள், கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மதிப்பெண்கள், வழிபாடு
மகிழ்ச்சி ரீசியாக 100க்கு 75 சதவீதமும், பொருளாதார ரீதியாக 100க்கு 80 சதவீதமும் நன்மையைப் பெறவீர்கள். வரதராஜப் பெருமாள் வழிபாடு உங்களுக்கு அற்புதமான மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications