Kadagam: சிக்கலில் சிக்கும் கடக ராசி.. கோபத்தைக் கட்டுப்படுத்துங்க பாஸ்
Kadagam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Kadagam Rasi Palan].
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் கோபப்படாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகளிடம் அதீதமான கவனத்துடனும், பிரச்சனைகளை வளர்க்காமலும் இருப்பது நன்மை பயக்கும். இணக்கமாகவும், பொறுமையாகவும் செல்வது நல்லது. எந்த விஷயத்தையும் தன் இஷ்டத்துக்குச் செய்யாமல் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
அனுகூலம்
உத்தியோக ரீதியான விஷயங்களில் மேலதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்பது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட வஷயங்களில் அற்புதமும், ஆதரவும் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். நல்ல மாற்றங்களும், நம்பிக்கையும் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
திடீர் அதிர்ஷ்டம்
வேற்று மொழி மனிதர்களால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். உங்களை சிலர் தனிமைப்படுத்தலாம் என்று நினைத்தாலும் பொறுமை காப்பது நன்மை பயக்கும். மார்ச் 14 ஆம் தேதி முதல் எல்லா விஷயங்களிலும் சாதகம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் விபத்து, எலும்பு முறிவு, கணவன், மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
ஆரோக்கியம்
எந்த விஷயங்களையும் சண்டை போடாமல் செய்ய முடியாது என்கிற நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மூலமாக பெரிய ஆபத்துகள் வரும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
பழனி முருகன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 60 சதவீதம், பொருளாதாரம் ரீதியா 65 சதவீமும் ஏற்றம் பெறும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். வயிறு, மன அழுத்தம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிக கவனம் தேவை. முருகர் வழிபாடு சகலவித நன்மைகளையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications