September Matha Palan: கடகத்துக்கு கட்டுகட்டாக பணத்தை அள்ளும் யோகம்..செப்டம்பரில் அடிக்கும் ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

kadagam-september-matha-palan-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-during-this-month

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.

இந்த செப்டம்பர் மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்

கடகம்

கடக ராசி, லக்கினக்காரர்களுக்கு பல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். கண், தொற்று காரணமாக சளி தொந்தரவு போன்றவை ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள், துணைக்கு வயிற்றுக்கு மேல் உடல் உபாதை வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் ஆரோக்கியம் குறைபாடால் பாதிப்புகள் வரும் சூழல் உண்டாகும்.

நல்ல காரியங்கள்

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு சூரியன், புதன் இணைவு ஏற்படுவது நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் கழுத்து தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் இனி நடக்க ஆரம்பிக்கும். தடைபட்டுக் கொண்டிருந்த அனைத்து காரியங்களும் இந்த காலகட்டத்தில் நடக்கும்.

அனுகூலம்

ஜாதகத்தில் சனி வக்கிரமாகவே இருந்தாலும் அரசு தொடர்பான காரியங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக நடக்கும் காது, மூக்கு, தொண்டை தொடர்பான படிப்புகளை படிக்கும் யோகம், நரம்பு, பல் மருத்துவம் தொடர்பான மருத்துவம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக விற்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்த வீடு, நிலங்களை விற்கும் யோகம் உண்டாகும்.

பேச்சில் கவனம்

நினைத்த அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். 2 ஆம் இடத்தில் சுக்கிரன், கேது, புதன், சூரியன் 15 நாட்களுக்கு இணைவு பெறுவதால் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெரிய வருத்தமோ, பாதிப்புகளோ எதுவும் ஏற்படாது. ஆனால், வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கடுஞ்சொற்களைப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

வீடு வாங்கும் யோகம்

வீடு வாங்குவதற்கான அருமையான யோகமான காலகட்டமாக இருக்கும். வீடு, நிலம் வாங்கும் இடத்தில் குளம், ஆறு ஓடும் கண்டிப்பாக கிடைக்கும். அருகில் பெருமாள் கோயில்கள், கடைவீதி இருப்பதற்கான வாய்ப்புள்ளது. சொந்த பந்தங்களுக்கு திருமணம் நடக்கம். நல்ல சந்தோஷமான நிகழ்வுகள் அனைத்தும் நடக்கும் காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 75 சதவீதம் அற்புதமான ஏற்றம் பெறுவீர்கள். பிரத்யுங்கரா தேவி வழிபாட்டை மனதார செய்வது பணத் தட்டுப்பாடு, பணத் தடை, ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகளில் இருந்து உங்களை பூரணமாக பாதுகாக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+