கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. அடுத்தடுத்து நல்ல செய்தி தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-weekly-rasi-palan-what-kind-of-benefits-kadagam-cancer-people-will-get-from-september-21

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். மன அழுத்தங்கள் தீரும். தொழிலில் அனுகூலம் காணப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் திடீரென ஏற்றம் பெறும் யோகம் உண்டு. குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

பெயர், புகழ்

உத்தியோகத்தில் அதிகமான ஏற்றம், நன்மைகளைப் பெறுவீர்கள். சுப விரையங்களைச் செய்து மகிழ்வீர்கள். மீடியா துறை, பத்திரிகைத் துறை, இசைத் துறை, சினிமா துறையில் இருப்பவர்கள் பெரிய பெயர், புகழைப் பெறும் அமைப்பு உள்ளது. அரசு கெளரவங்கள் ஏற்படும். பதவி உயர்வில் இருந்த தடைகள் நீங்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

கடன்கள் தீரும்

உத்தியோகத்தில் தொடர்ந்து இருந்து வந்த மனத் தாங்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். பழைய கடன்களைத் தீர்ப்பதற்கான உங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும். அரசு தேர்வுகளின் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு வெற்றிகள் ஏற்படும். வயிறு தொடர்பான, தொற்று நோய் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

குடும்பம்

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருள்கள் மற்றும் சுபச் செலவுகளை செய்யும் யோகம் உண்டாகும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதன்கிழமை மதிய வேளைகளில் ஏழை, எளியோருக்கு சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாக கொடுப்பது நன்மை பயக்கும்.

வழிபாடு

சனிக்கிழமை தோறும் தேவிகளை வழிபாடு செய்வது குடும்பத்தில் நிம்மதியையைும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். வாரத்திற்கு ஒருமுறை சனிக்கிழமைதோறும் தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அற்புதமான அமைப்பை ஏற்படுத்தும். தைரியத்துடன் எடுத்த காரியங்களை முடித்து வெற்றி பெறும் யோகம் உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+