Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நவக்கிரகத்தில் இருக்கும் சனி, புதன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். தீபமேற்றி வழிபாடு செய்வது நன்மையைத் தரும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ், அலர்ஜி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வெளியிடம், தொழில், உத்தியோகம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் அமைப்பு உண்டு.
வெற்றி மேல் வெற்றி
எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். உறவுகளில் மேன்மை ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் அமைப்பு உள்ளது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் வெளியூர்களுக்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வீர்கள்.
நன்மைகள்
அடுத்தடுத்து நிறைய நன்மைகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடக் கூடாது. அதே நேரம் உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிலர் துரோகம் செய்ய வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
கவனம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, அரசு, அரசியலில் முன்னேற்றம் இருந்தாலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் மற்றவர்களால் தொந்தரவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அஷ்டமத்தில் இருக்கும் சுக்கிரனுக்கு சந்திரன் பார்வை, குருவுக்கு சந்திரன் பார்வை இருப்பதால் எல்லா விஷயங்களிலும் நன்மைகள் நடக்கும்.
அனுகூலம்
எதிர்பாராத நல்ல விஷயங்கள் பெண்ணின் மூலமாக நடக்கும். எதிர்பாராத நன்மைகள், சந்தோஷங்கள் ஏற்படும். 7 ஆம் இடத்தில் 4 கிரகங்கள் இருப்பதால் கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவருக்கும் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. விவாகரத்துக்கு அப்ளை செய்திருப்பவர்களுக்கு எதிரான விஷயங்கள் நடக்கும். இந்த மாதம் முழுவதும் டென்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications