Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. இந்த விஷயங்களில் கவனம்
Kanni Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசியினருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் ஏற்படக்கூடிய காலகட்டம். கூட்டாளிகளுடன் மன வருத்தம், தொழில் ரீதியாக இருந்து வந்த பாதிப்புகளை அதீத கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆதாயம்
உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேசமயம் மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வேற்று மொழி மனிதர்களால் அதிக சந்தோஷமும், ஆதாயமும் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.
வாகன யோகம்
அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தூரப் பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். வலுக்கி விழுவது, சிறிய விபத்துகளில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். தொழில், வேலை ஸ்தானத்தில் பெரிய வெற்றிகள் பெறுவதற்கான காலகட்டமாக இருக்கும். வேலையில் நல்ல மகிழ்ச்சி ஏற்படும். பெரிய வண்டிகளை வாங்குவதற்கான யோகம் உண்டு.
கவனம்
ஆண்களிடம் பழகும்போது, ஆண்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகள், குழப்பத்திற்கு ஆட்படும் சூழல் உள்ளதால் கவனம் தேவை. சனி பார்வை இருப்பதால் புதிய வாய்ப்புகள் வரும்போது பார்த்து எடுத்துக் கொள்வது நல்லது. பெரிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பில்லை. முருக பகவானை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
தனிப்பட்ட பிரச்சனைகளை பெரிய பிரச்சனைகளாகப் பார்த்து மன வருத்தப்படாமல் இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனைகளைப் பெரிதாக்காமல் பொறுமையாக இருப்பது நன்மைகளை ஏற்படுத்தும். பெருமாள் தாயார் வழிபாடு உங்களைப் பாதுகாக்கும். உறவில் கவனமாக இருக்க வேண்டும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications