Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு டபுள் தமாக்கா.. உங்கள் துணை ஆசைப்பட்டதை நிறைவேற்றும் காலம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் கன்னி ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni rasi palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு விராயாதிபதியான சூரியன் 7 ஆம் இடத்தில் சனியோடு இணைந்திருக்கிற மாதமாக இந்த மாதம் அமையும். கணவன், மனைவி மூலமாக ஏதாவது செலவுகள் ஏற்படும். நிறைய சுபச் செலவுகள் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும். 10 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் 2 ஆம் இடத்தை வலிமையாகப் பார்க்கிறார்.
வருமானம் கொட்டும்
வருமானம் வரும். ஆனால் பணத்தை சேர்த்து வைக்க முடியாத அளவிற்கு சுபச் செலவுகள் இருக்கும். நீண்ட நாட்களாக கணவன், மனைவி விரும்பி கேட்ட பொருள்களை வாங்கிக் கொடுக்கக்கூடிய சுபச்செலவுகள் ஏற்படும் நன்மையான காலகட்டமாக இருக்கும். மாதத்தின் முதல் 20 நாட்கள் ராகு, செவ்வாய் 6 ஆம் இடத்தில் குருவின் பார்வையில் இருக்கிறது.
மன உறுதி
பாவக்கிரகங்கள் 6 ஆம் இடத்தில் இருப்பதால் எதிர்ப்புகள் விலகும். எதிரிகளை நீங்கள் அடக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். யாரிடம் எப்படி பேச வேண்டும். எந்தப் பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் என்கிற மன உறுதி ஏற்படும். குறிப்பாக விளையாட்டுத் துறையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு புகழைப் பெறக்கூடிய அமைப்பு உள்ளது.
அனுகூலம்
அரசு ஆதரவுகள், அனுகூலங்கள் கிடைக்கும் அமைப்பு உண்டு. ஒரு சிலருக்கு தந்தையிடம் இருந்து சாதகமில்லாத பதில்கள் வராமல் இருக்கும். தூரத்தில் இருக்கும் நபர்கள் உள்ளூரில் இருக்கும் தந்தையின் உடல்நிலை குறித்து கவலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடனடியாக குடும்பத்தைச் சென்று பார்க்க முடியவில்லையே என்கிற கவலை ஏற்படக்கூடிய அமைப்புள்ளது.
முன்னேற்றம்
இருப்பினும், மாதத்தின் கடைசி 5 நாட்கள் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படும். தந்தையிடம் இருந்து சில பாசிட்டிவான அமைப்புகள் வந்து சேரும். பெரிய சோதனையான அமைப்புகள் எதுவும் ஏற்படாது. வாழ்க்கைத் துணை மூலமாக இருந்த வழக்குகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக மாறக்கூடிய அமைப்பு உண்டாகும். முன்னேற்றத்தைத் தரக்கூடிய மாதமாக இந்த பங்குனி மாதம் உங்களுக்கு அமையும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications