September Matha Palan: கன்னிக்கு அற்புதமான மாற்றம் காத்திருக்கு.. கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.
இந்த செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்
கன்னி
கன்னி ராசி, லக்கினக்காரர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அற்புதமான காலகட்டமாக இருக்கும். மறைமுகமாக நிறைய விஷயங்கள் நடக்கும். நல்ல செலவுகள் செய்வீர்கள். பிள்ளைகளுக்காக நிறைய சுப காரியங்கள் நடக்கும். வேறு ஊர் செல்வது, வேறு நாட்டுக்குச் செல்வது போன்ற யோகம் உண்டு. கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
உடல்நிலை பாதிப்பு
வீட்டில் யாரோ ஒருவக்கு உடல்நிலையில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதற்கான செலவுகள் ஏற்படும். குறிப்பாக மூத்த பெண்களுக்கு பிரச்சனை நேரிடும். மற்றபடி எல்லா வகையிலும் நீங்கள் ஏற்றத்தைப் பெறுவீர்கள். ராசி, லக்கினத்தில் சூரியன், புதன் சேருவதால் டென்சன் அதிகரிக்கும். கன்னியில் பிறந்த பலருக்கு ஆரோக்கியத்தில் மூளையில், தலையில் பிரச்சனை வரும். தலைவலி, ஒற்றை தலைவலி, கேல்சியம் பாதிப்பு, எலும்பில் அடிபடுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஆரோக்கியம்
கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவருக்கும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். அரசு சார்ந்த வேலைகள் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பவர்களுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு கண்டிப்பாக நடக்கும். அதுவரை நாம் சென்று போராடும் நிலைமை ஏற்படும். அரசுத் துறையில் இருக்கும் அதிகாரிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
லஞ்சத்தில் சிக்கும் வாய்ப்பு
அரசு அதிகாரிகள் லஞ்சத்தில் பிடிபடும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, மருத்துவத் துறை, விடுதிகள், மளிகை உற்பத்தி சார்ந்த துறை போன்றவற்றில் கண்டிப்பாக பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் ஒருத்தர் கட்டாயமாக வீடு வாங்குவீர்கள். நிறைய பேருக்கு மருத்துவருக்கான சீட்டு கிடைக்கும்.
வெற்றி
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுடைய திறமை என்ன எனும் தெரிந்து கொள்ளும் காலகட்டம். சர்ச்சையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பிரஷர், எதிர்மறையான விஷயங்கள் இருக்கும். ஆனால் பெரிய அளவிலான பாதிப்புகள் வராது. பொறுமையாக இருந்த எல்லா விஷயங்களையும் சாதிப்பது நல்லது. செப்டம்பர் 15க்கு மேல் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
வழிபாடு
சந்தோஷமும், பொருளாதாரம் ரீதியாக 75 சதவீதம் நன்றாக இருக்கும். அனந்த பத்மாநாபனை வழிபாடு செய்வது அற்புதமான மாற்றத்தையும், ஏற்றத்தையும் அள்ளிக் கொடுக்கும் காலகட்டமாக இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications