Rasi Palan This Week: கன்னி ராசிக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. நகை, சொத்துகளைக் குவிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி 9 முதல் ஆவணி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Kanni Lucky zodiac signs

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சுபவிரைய பிராப்தம் அதிகளவில் நடக்கும் காலகட்டமாக இருக்கும். பண விரையம் நிறைய காணப்படும் என்பதால் விலை உயர்ந்த பொருள்களை கையாளும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கன்னி ராசியினர் இருக்கும் வீட்டில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வீடு கட்டுவது, வீடு வாங்குவது போன்ற நல்ல காரியங்களைச் செய்வீர்கள்.

நகைகள் வாங்கும் யோகம்

இன்டீரியர் செய்வது, வீட்டை புனரமைப்பது, நகை வாங்குவது, வெள்ளி, வைரம் பொருள்களை வாங்குவது போன்ற அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். கடன் வாங்கியாவது நல்ல காரியங்களை செய்யும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் அற்புதமான முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படும். ஆதாயம், அனுகூலம் காணப்படும்.

ஆரோக்கியம்

ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. கழுத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு உடற்பயிற்சி செய்வது நல்லது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம் இது. உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள், மகிழ்ச்சி ஏற்படும்.

தொழில் தொடங்கும் யோகம்

வேலையில் இருப்பவர்கள் தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். இதுவரை ஏதாவதொரு பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டே வந்திருப்பீர்கள். ஆனால், இனி இழுபறியாக இருந்த விஷயங்கள் அனைத்தும் இனி டக்கு டக்கென்று நடக்கும். ராகு பலத்தால் நல்ல விஷயங்கள் நடக்கும். ஆண்கள், பெண்கள் இருவரும் தங்களது எதிர்பாலினத்தரால் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அனுகூலம்

பண விஷயங்களுக்குப் பிரச்சனை இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல ஏற்றத்தைக் காண்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். நன்மைகள் பலவும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். மனதிற்குப் பிடித்த விஷயங்கள் எல்லாம் நடக்கும் காலகட்டம். ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+