கார்த்திகை மாத ராசி பலன் 2020 : விருச்சிகத்தில் கேது உடன் இணையும் சூரியனால் யாருக்கு யோகம்
கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிகம் ராசியில் பயணம் செய்கிறார். நீச்ச நிலையில் இருந்த சூரியன் தனது உச்ச நிலையை அடைய பயணத்தை மேற்கொள்கிறார். சூரியன் கேது உடன் இணைந்து சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் மே
சென்னை: கார்த்திகை மாதம் தெய்வீக அனுபவங்கள் நிறைந்த மாதம். கார்த்திகை மாதம் முதல் நாள் சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் பயணத்தை தொடங்குவதால் இது விருச்சிக மாதமாகவும் போற்றப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீச்சம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
நம் உடம்பில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில்தான் சீராக இயங்கும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை. கார்த்திகை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் விருச்சிகத்தில் சூரியன், கேது, துலாம் ராசியில் புதன்,சுக்கிரன், தனுசு ராசியில் சனி, மீனம் ராசியில் செவ்வாய் ரிஷபம் ராசியில் ராகு என கிரகங்கள் உள்ளன.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் கார்த்திகை 2ல் சுக்கிரன் துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். கார்த்திகை 25 சுக்கிரன் விருச்சிகம் ராசிக்கு நகர்கிறார் கார்த்திகை 13 புதன் விருச்சிக ராசிக்கு நகர்கிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஆன்மிக அதிர்வலைகளால் நம் அகத்தினில் உள்ள அழுக்கினை அகற்றி நெஞ்சத்திற்கு நெகிழ்ச்சியைத் தரும் கார்த்திகை மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாதம் சந்தோஷங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. பிள்ளைகள் திருமணம் பேசி முடிக்கலாம். வீடு கட்ட ஆரம்பிக்கலாம். புதிய வண்டி வாகனம் வாங்கலாம். சுக்கிரன் பார்வையால் யோகம் வரும். சூரியன் எட்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளதால் அரசு வேலை கிடைக்கும் யோகம் வரும். பிரபலமானவர்களின் அறிமுகம் வரும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். விருந்து விஷேசம் என்று செல்வார். குரு பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பதவியில் சில மாற்றம் வரும். வியாபாரம் அபரிமிதமாக லாபம் வரும். ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணம் கைக்கு வரும். பெருமாள் கோவிலுக்கு போய் நெய் தீபம் ஏற்றுங்கள். ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, இந்த மாதம் அமோகமான மாதம். குருவின் பார்வையால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். அலைச்சல் குறையும். கொடுத்த பணம் திரும்ப வரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் கவனம் தேவை. கண் பிரச்சினைகள், வயிறு வலி வரும் கவனம் செலுத்துங்கள். புதன் மாத மத்தியில்தான் சாதகமாக மாறுகிறார். அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். வங்கி லோனுக்கு அப்ளை செய்யலாம். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். சூரியன் ஏழாம் வீட்டிற்கு வந்து இருக்கிறார். வழக்குகளில் ஜெயித்து காட்டுவீர்கள். வண்டி வாகனங்களை கவனமாக ஓட்டுங்கள். பண விசயங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கார்த்திகை மாதம் கவலைகள் தீரும் மாதமாக அமைந்துள்ளது.

மிதுனம்
புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு சூரியன் இப்போது ஆறாம் வீட்டிற்கு மாறியுள்ளதால் நிம்மதியாக மாறும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணவரவு வரும். சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் புத்திர பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகளுக்கு திடீர் திருமண யோகம் வரும். பூர்வீக சொத்து விவகாரங்கள் தொடர்பாக பேசலாம். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்கள் உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம் கவனம். வேலை செய்யும்இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். உடல் அரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் சக்கரத்தாழ்வார் வழிபாடு அவசியம். அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே, உங்களுடைய யோகாதிபதி குருபகவான் உங்க ராசியை பார்வையிடுகிறார். தள்ளிப்போன காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீடு கட்ட தொடங்குவீர்கள். சூரியன் ஐந்தாம் வீட்டிற்கு மாறியுள்ளதால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இழந்த பதவி கிடைக்கும். நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். கோதுமை தானமாக கொடுங்கள்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே உங்க ராசி நாதன், இதுநாள் வரை மூன்றாம் வீட்டில் சஞ்சரித்தார் மன கலக்கம் அதிகரித்தது. சூரியன் இன்று முதல் நான்காம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். உங்களின் மன சஞ்சலம் நீங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். ரகசியங்களை வெளியில் காட்ட வேண்டாம். சில விசயங்களை உங்களுடைய மனதில் வைத்து அதை வெற்றிகரமாக மாற்றுங்கள். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

கன்னி
புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார் தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிவபெருமானை திங்கட்கிழமைகளில் தரிசனம் செய்யுங்கள்.

துலாம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்களுடைய ராசியில் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சவால்களை ஜெயிப்பீர்கள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதன் உங்களுடைய ராசிக்கு சாதகமாக இருப்பதால் பணவரவு அபரிமிதமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். வீடு மாறலாம் வண்டி வாகனம் வாங்கலாம். முருகப்பெருமானை வணங்கலாம். கார்த்திகை மாதம் அருமையான மாதமாக மாறும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்க யோகாதிபதி சூரியன் உங்களுடைய ராசிக்குள் சஞ்சரிக்கிறார். அலைச்சல்கள் நீங்கும். சுக்கிரன் நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால் வீடு கட்டலாம் வீடு வாங்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கலாம். பிள்ளைகளால் இருந்த பிரச்சினைகள் நீங்கும். முன்கோபத்தை கட்டுப்படுத்துங்கள். செலவில் சிக்கனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். இந்த மாதம் அற்புதமான யோகம் வருகிறது. வேலையில் சந்தோஷம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் வெற்றிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். கார்த்திகை மாதம் அற்புதமான மாதமாக அமையும்.

தனுசு
ராசிநாதன் குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 2ஆம் வீட்டில் பயணம் செய்வதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும் தடைபட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வார்த்தைக்கு மரியாதை கூடும். சுக்கிரன் 11ஆம் வீட்டிற்கு வருவதால் வேலையில் இடமாற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அரசு விசயங்கள் வெற்றிகரமாக முடியும். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கார்த்திகை மாதத்தில் திடீர் யோகங்கள் வரும். காலபைரவாஷ்டமி நாளில் பைரவரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்
வீடு மனை வாங்கலாம் எதிர்பார்த்த யோகம் வரும் செல்வாக்கு அதிகரிக்கும். பெரிய பதவிகள் பொறுப்புகள் தேடி வரும். சூரியன் 11ஆம் வீட்டிற்கு வருவதால் பதவி உயர்வு வரும். சம்பள உயர்வு அதிகரிக்கும். வியாபாரத்தில் இழந்த லாபத்தை மீண்டும் பெறுவீர்கள். உறவினர்கள் வீட்டு விஷேசங்கள் முன்னின்று நடத்துவீர்கள். உணவுக்கட்டுப்பாடு அவசியம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தை கோபத்தை கட்டுப்படுத்துங்கள். பைரவருக்கு ஞாயிறு கிழமைகளில் தீபம் போடுவது நல்லது.

கும்பம்
கார்த்திகை மாதம் அருமையான மாதம் சூரியன் 10வது வீட்டில் அமர்ந்துள்ளதால் புதிய வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யுங்கள். சம்பள உயர்வு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். பெற்றோர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். திருமண கைகூடி வரும். மகனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்கள் வெற்றிகரமாக முடியும். விரைய ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியிருப்பதால் செலவுகள் அதிகரிக்கும் கட்டுப்படுத்துங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் காட்டுங்கள். எல்லாவகையிலும் நிர்வாகத்திறமை அதிகரிக்கும் விஐபிகள் ஆதரவு கிடைக்கும். சொத்து வாங்கி விற்கலாம். குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும். சகோதர வகையில் யோகம் அதிகரிக்கும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம். பெண்களுக்கு யோகங்கள் அதிகரிக்கும். அப்பா வழி உறவினர்கள் மூலம் சுப காரியங்கள் நடைபெறும். வேலையில் இருப்பவர்கள் நிதானமாக வேலையில் கவனம் செலுத்துங்கள். சனிப்பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்து வாருங்கள். திருப்பதி வெங்கடாசலபதியை சென்று வணங்கி வருவது நன்மையை தரும்.

மீனம்
ராசிக்கு 10ஆம் வீட்டில் சஞ்சரித்த குரு லாப ஸ்தானத்திற்கு வருகிறார். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு அபரிமிதமாக வரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை, உயரதிகாரிகளிடம் நிதானமாக பேசவும். அரசியல்வாதிகளுக்கு யோகமும் வெற்றியும் நிறைந்த மாதம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் மனஸ்தாபங்கள் வரலாம் கவனம் தேவை. உணவு விசயத்தில் அக்கறை காட்டவும் சத்தான உணவுகளை சாப்பிடவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அவசரப்பட வேண்டாம். கவனமும் விழிப்புணர்வும் தேவை. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் வரும். கந்த சஷ்டி நாளில் முருகனை வழிபடுங்கள் எதிரிகள் தொல்லை ஒழியும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications