Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்திகை மாத ராசி பலன் 2021: மேஷம் முதல் கன்னி ராசி வரை பலன்கள் பரிகாரங்கள்

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. செவ்வாய் பகவானின் வீடான விருச்சிகத்தில் சூரியன் பயணத்தை தொடங்குகிறார். இந்த மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் எ

Subscribe to Oneindia Tamil

சென்னை: செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்த விருச்சிக ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி ஆகியவற்றைப் பொருத்து மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கார்த்திகை மாதம் பிறக்கும் போது 12 ராசிகளில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன், ரிஷப ராசியில் ராகு துலாம் ராசியில் செவ்வாய், புதன், விருச்சிகத்தில் சூரியன்,கேது தனுசு ராசியில் சுக்கிரன்,மகர ராசியில் குரு சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகங்கள் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் கார்த்திகை 4ஆம் தேதி புதன் விருச்சிக ராசிக்கு சென்று சூரியன் கேது உடன் இணைகிறார். குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி கும்ப ராசிக்கு செல்கிறார். கார்த்திகை 18ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசிக்கு சென்று சூரியனுடன் இணைந்து தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். 22ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். புதன் 23ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த கிரகங்களின் மாற்றம் பார்வைகள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் செவ்வாய், புதன், 8ஆம் வீட்டில் சூரியன் கேது ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் பத்தாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. அற்புதங்கள் அதிகம் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது. சூரியன் எட்டாம் வீட்டில் இருந்தாலும் பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படாது. எதிரிகள் தொல்லை ஒழியும். ராசிநாதன் செய்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வரப்போவதால் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், அப்பாவின் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும் கவலைகள் தீரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். மனநிலை தெளிவாக இருக்கும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். லாபம் ஏற்படும். வேலை தொழிலில் கவனம் தேவை. சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் உதவியால் திருமண சுப காரியம் நடைபெறும். சுப செய்திகள் தேடி வரும். ஆரோக்கியம் அதிகரிக்கும் பெண்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் தம்பதியர் அடையே அன்பும் காதலும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சொத்து சேர்க்கை உண்டாகும். எட்டாம் வீட்டில் உஷ்ண கிரகங்கள் பயணம் செய்வதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை. ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும். திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அங்காரக சதுர்த்தி நாளில் வழிபட கடன் பிரச்சினை நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சூரிய நமஸ்காரம் செய்ய நன்மை அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் கிரகங்கள் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும், அப்பாவின் தொழிலில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பகுதியில் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருப்பதால் பெண்களால் மனம் சங்கடப்படும் நிலை ஏற்படும் கவனமாக இருக்கவும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்கு இடம் மாறுவதால் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவதுடன், பொருளுதவியும் செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலைவாய்ப்பு தேடி வரும். பத்தில் குரு சில நேரங்களில் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவார் கவனம் தேவை. சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு உதவும், வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் வியாபாரக் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும்.

மிதுனம்

மிதுனம்

அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன்வாங்கும் நிலை ஏற்படும், பிள்ளைகள் விசயத்தில் கவனமும் கண்காணிப்பும் அவசியம் தேவை. செவ்வாய் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தில் இருந்து பங்கு கிடைக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் இந்த மாதம் திருமண சுப காரியங்கள் வெற்றியைத் தரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் அதோடு அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் நிலை ஏற்படும். வீண் செலவுகளில் கவனமும் நிதானமும் தேவை.

கடகம்

கடகம்

சூரியன், கேது பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும், அரசு ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செவ்வாய் நான்காம் வீட்டில் இருப்பதால் புது வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியடையும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் செவ்வாயால் பார்க்கப்பட்டு சந்திர மங்கள யோகத்தை உருவாக்குகின்றார். ஆரம்பமே அமர்களம் என்பது போல இருந்தாலும் குருபகவான் அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கின்றார். கண்டகச் சனி காலமாகவும் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். உணவு விசயத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதே நல்லது. சண்டை சச்சரவுகள் எட்டிப்பார்க்கும். பணிபுரியும் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். தேவையற்ற இட மாற்றங்கள் கிடைக்கலாம். உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய கால கட்டம் இதுவாகும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருப்பதால் பெண்களால் தொல்லை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும், வியாபாரம் விருத்தியாகும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்மம்

அரசு வாகன யோகம் உண்டாகும், அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கல்வியில் மேன்மை உண்டாகும். அம்மாவின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். குருவின் நேரடி பார்வை உங்கள் ராசியில் பதிவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். வேலையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும், புகழும் கூடும். அரசு வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். உறவினர்கள் வீட்டு திருமணங்களை நடத்தி வைப்பீர்கள். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கலாம். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும், யாருக்கும் பணம் கடன் கொடுக்க வேண்டாம். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி

சூரியன் கேது உடன் இணைந்து மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான லாப ஸ்தானத்தில் இருப்பதால் சகோதரர்கள் மூலம் பணவரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பயணம் செய்வதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பகைமை பாராட்டாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் நான்காம் வீட்டில் பயணம் செய்வதால் வீட்டை அழகுபடுத்துவீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் விருந்தினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+