குரு, சுக்கிரன் பார்வையால் அதிர்ஷ்டம் பெறும் மேஷ ராசி.. தொழில் விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், மேஷம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

karthigai-matha-rasi-palan-2026-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு ராசியும், ராசிநாதனும் குருவின் தொடர்பில் இருக்கக்கூடிய அற்புத மாற்றங்கள் நிறைந்த நல்ல மாதமாக இருக்கும். பெரிய அளவில் சோதனைகள் எதுவும் இருக்காது. எதையும் சமாளிக்கக்கூடிய அமைப்பு. அதிர்ஷ்டம் அருகில் இருப்பது போன்ற எண்ணம் ஏற்படும். பெரிய அளவில் மாற்றமும், முன்னேற்றமும் இருக்கும்.

ஜென்மசனி

ஏழரை சனியில் உங்களுக்கு ஜென்மசனி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் ஆரம்பிக்கிறது. ஜென்மசனியில் ஏதாவதொரு வகையில் சங்கடங்கள், பொருளாதாரத் தடைகள், வேலையில் ஏதாவது பிரச்சனைகள் வரும். ஆனால், பெரிய அளவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. ராசியும், ராசிநாதனும் வலுவாக இருப்பதால் எல்லா விஷயங்களையும் எளிதாக சமாளிப்பீர்கள்.

குரு, சுக்கிரன் பார்வை

குருவும், சுக்கிரனும் ஒருசேர 5, 7 ஆம் இடங்களில் இருந்து ராசியைப் பார்க்கின்றனர். குரு, சுக்கிரனின் பார்வை இருப்பதால் ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். 7 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரனால் திருமணத்தில் இருந்து வந்த தடை அமைப்புகள் நீங்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் விலகும்.

முன்னேற்றம்

பிள்ளைகள் திருமணத்துக்கு சம்மதிப்பார்கள். தூர இடத்தில் இருக்கும் பிள்ளைகள் மீண்டும் வருவதற்கு சம்மதிப்பார்கள். தூர இடத்திற்கு போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் பற்றிய கவலைகள் நீங்கக்கூடிய யோகம் உண்டாகும். படிப்படியாக முன்னேற்றம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

தைரியம் அதிகரிக்கும்

எல்லா விஷயத்திலும் தைரியம், தெம்புடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செய்வோருக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். ஜென்மசனி நடைபெறுவதால் இப்போது பேராசைப்பட்டு எதையும் தொடங்காமல் இருப்பது நல்லது. வேலையை விட்டு தொழில் தொடங்குவது போன்றவற்றில் சிறு சிறு தடைகள், சங்கடங்கள் ஏற்படும். கூட்டுத் தொழிலை செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும்.

பெண்களுக்கு யோகம்

மேஷ ராசி பெண்களுக்கு கணவரால் ஓரளவுக்கு சந்தோஷம் ஏற்படும். கணவருக்கு சிறு சிறு முன்னேற்றம் ஏற்படும். பெரிய சோதனைகள் இருக்காது. 80 சதவீதம் நன்மைகளைப் பெறக்கூடிய காலகட்டமாக இந்த கார்த்திகை மாதம் உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+