கார்த்திகை மாத ராசி பலன் 2026: கன்னி ராசிக்கு புகழ் தேடி வரும்.. பண விஷயத்தில் மட்டும் கவனம்
கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு நல்லவை கூடுதலாக நடக்கும் காலகட்டமாக இருக்கும். 12 ஆம் இடத்தில் செவ்வாயும், குருவும் இருந்தாலும் கூட, 2 ஆம் இடத்தில் சுக்கிரன் அற்புதமான அமைப்பில் இருக்கிறார். 8 ஆம் இடம் சுபத்துவமாக இருப்பதால் எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். ஏதோ ஒரு வகையில் கடவுளின் பார்வை உங்கள் பக்கம் இருக்கும். விபரீத ராஜயோகம் ஏற்படும்.
புகழ் ஏற்படும்
தன்னம்பிக்கை அதிகரிக்கும். புகழ் கிடைக்கும். கலைத் திறமையை வைத்துக் கொண்டு வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் வாய்ப்புகள் தேடி வரும். மீடியா துறையில் சாதிக்க வேண்டும், சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றங்கள், மாற்றங்கள் ஏற்படும்.
லாபம் கொட்டும்
பயணங்களின் மூலமாக நன்மைகள் ஏற்படும். வெளிமாநிலம், வெளிநாடு போன்ற தொலைதூரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்து உங்களை நம்பி அனுப்பக்கூடிய வேலைகளை சீக்கிரமே முடித்துக் கொடுப்பீர்கள். பெரிய கஷ்டங்கள் எதுவும் இருக்காது. அடுத்த ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது.
பணவரவு
வரும் சில மாதங்களில் பண வரவு நன்றாக இருக்கும். அதனை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. செலவுகள் செய்யாமல் இருப்பது. மற்றவர்களை நம்பி தொழில் ஆரம்பிப்பதை தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். முதலீடு செய்வதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. 2028, 2029 அற்புதமாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
கவனம்
2028, 2029 சுமாராகத்தான் இருக்கும். பொருளாதார முன்னேற்றத்திற்கு தடை போன்றவை ஏற்படும். பண விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. மற்றவர்களிடமிருந்து விலகி இருக்கும் மாதமாக இந்த கார்த்திகை மாதம் அமையும். அஷ்டமத்து சனி வருவதற்கு 7 மாதங்கள் இருந்தாலும் அதன் தாக்கத்தை இப்போதிருந்தே அனுபவிக்கத் தொடங்குவீர்கள்.


Click it and Unblock the Notifications
