கார்த்திகை மாதத்தில் மகர ராசிக்கு கைநிறைய பணம்.. வெளிநாட்டு யோகம்.. டும் டும் டும் சத்தம் நிச்சயம்
கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், மகரம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மகரம் ராசி பலன்
மகரம் ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் நிச்சயமாக ஏற்படும். 8 ஆம் இடத்தில் குரு, கேது, செவ்வாய் சேர்க்கை. 8, 11க்கு உடையவர்கள் பரிவர்த்தனையில் இருக்கும் அமைப்பு மிகப்பெரிய நன்மைகளைத் தரும். இதுவரை 2 ஆம் இடத்தில் இருந்து பண வரவுகளைத் தடுத்துக் கொண்டிருந்த ராகு ராசிக்கு மாறியிருக்கிறார். இந்த தன்மை கண்டிப்பாக நல்ல நன்மைகளைத் தரும்.
பணவரவு
தன லாபம், பண வரவு அற்புதமாக இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, நல்ல சம்பளம் போன்றவை கிடைக்கும். அடுத்தடுத்து வரக்கூடிய சில நிகழ்வுகளால் யோகம் ஏற்படும். பெரிய கஷ்டங்கள் எதுவும் ஏற்படாது. எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். பங்குச் சந்தையில் சம்பாதிக்கும் யோகம் ஏற்படும். இழந்ததை மீண்டும் பெறக்கூடிய அமைப்பு ஏற்படும்.
வெளிநாடு யோகம்
ஏற்கனவே நட்பை உதறி தள்ளியவர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். தூர தேசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளி மாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு உயர்கல்வி, படிப்பு, வேலைக்குச் செல்வது, வெளிநாட்டில் சொந்த வீடு வாங்குவது, குடியுரிமை கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும்.
வருமானம்
கூட்டுத் தொழிலில் நன்மைகள் நடக்கும். தெய்வ திருப்பணிகளைச் செய்வீர்கள். மலைப் பிரதேசங்கள், காபி, டீ தோட்டம், மலைப் பிரதேசங்களில் இருப்பவர்கள், வேலை செய்பவர்கள், கட்டட வேலை செய்பவர்களுக்கு நல்ல வருமானம் வரக்கூடிய மாதமாக இந்த கார்த்திகை மாதம் உங்களுக்கு அமையும். ஆண், பெண் உறவுகள் நன்றாக இருக்கும்.
திருமண யோகம்
திருமணத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். திருமண யோகம் ஏற்படும். நீதிமன்றம், வழக்கு என்றிருந்தவர்களுக்கு சாதகமான அமைப்பு ஏற்படும். சுமூகமான தீர்வுகள் கிடைக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications
