கார்த்திகை மாத ராசி பலன் 2026: ஆட்டத்தை தொடங்கும் சிம்ம ராசி.. இழந்தவை மீண்டும் கிடைக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், சிம்மம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

karthigai-matha-rasi-palan-2026-what-kind-of-benefits-will-simmam-rasi-people-get

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசியினருக்கு பெரிய நிம்மதி இந்த மாதம் முதல் ஏற்படும். 6 ஆம் இடத்துக்கு ராகு கேது பெயர்ச்சியாகியுள்ளதால் எதிரிகளை ஜெயிக்கும் யோகம் ஏற்படும். எல்லா விஷயங்களும் நிறைவாக இருக்கக்கூடிய காலகட்டம். எதிர்ப்புகளை வெல்லும் அமைப்பு. ராசியில் சிம்ம ராசி வலுவாக உள்ளது. ராசியில் குரு பகவான் வந்து அமர்ந்திருக்கிறார்.

எதிரிகள் தொல்லை நீங்கும்

கார்த்திகை முதல் நாளில் இருந்தே நீச்சத்தில் இருந்த சூரியன் பரிவர்த்தனை அமைப்பில் வருகிறார். குருவும், செவ்வாயும் சேர்ந்திருக்கின்றனர். உங்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த எதிரிகள் இனி ராகு கேதுவால் தொல்லைகளை அனுபவிப்பார்கள். கார்த்திகை மாதம் முதல் உங்கள் நிலைமை நன்றாக இருக்கும். ஆனால், எதிரிகள் பாதிக்கப்படுவார்கள்.

அனுகூலம்

அஷ்டமத்து சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் பூர நட்சத்திரக்காரர்கள் எல்லாருக்கும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ராசி வலுவாகி, ராசிநாதன் வலுவாகி பரிவர்த்தனை ஆகியிருக்கிற அமைப்பு கார்த்திகை மாதத்தில் பெரிய அடித்தளத்தை ஏற்படுத்தும். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அஷ்டமத்து சனி விலகுகிறது. 30 ஆண்டுகளுக்கு உங்களுக்கு அஷ்டமசனி வராது.

பிரச்சனை தீரும்

ஜூன் மாதத்தில் இருந்து சிம்ம ராசியினர் வீறு கொண்டு எழக்கூடிய சூழல் ஏற்படும். சிம்மம், மீனம் இருக்கும் வீட்டில் பொருளாதார பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை என ஏதாவது ஒன்றை சந்தித்துக் கொண்டிருந்தீர்ப்பீர்கள். இந்த நிலைமைகள் அனைத்தும் கார்த்திகை மாதம் முதல் விலகும்.

பணவரவு

90 சதவீதம் பேருக்கு தொல்லைகள், துக்கங்கள் குறையும். தைரியம் அதிகரிக்கும். தந்தை வழி அமைப்பில் கைகொடுக்காத நிலைமைகள் அனைத்தும் மாறும். சொந்த ஊரில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். செலவுகள் செய்து கொண்டிருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். செலவான இடத்தில் இருந்து வரவுகள் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். அண்ணன், தம்பி, அக்காள், தங்கை உறவுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஒற்றுமைகள் மேம்படக்கூடிய யோகம் ஏற்படும்.

இழந்தவை கிடைக்கும்

4, 1 பரிவர்த்தனை ஏற்படுவதால் கெளரவம், அந்தஸ்து கூடும் அமைப்பு ஏற்படும். ஏதோ ஒரு விதத்தில் இழந்த விஷயங்கை மீட்டெடுக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப அமைப்பில் மகிழ்ச்சி ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+