Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kumbam Rasi Palan: ஆட்டத்தை ஆரம்பிக்கும் கும்ப ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டு.. ஒரு விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் கும்ப ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

karthigai-matha-rasi-palan-what-kind-of-benefits-will-get-kumbam-capricorn-rasi-people-during-thi

யோகங்கள்

சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கும்ப ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு ராசியதிபதி சனி பகவான் வரும் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்களுக்கு இருந்து வந்த மன அழுத்தம், பாரங்கள் அனைத்தும் குறையும். ஏழரை சனியாக இருந்ததால் பல பாதிப்புகள் வந்திருக்கும். இருப்பினும், நல்ல அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள். நாம் செய்த கர்ம வினைகளை ஏழரை சனியில் கழிப்போம். இப்போது சனி பகவான் வக்கிர நிவர்த்தியாகிறார். கண்டிப்பாக நல்ல நன்மைகள் ஏற்படும்.

பணவரவு

பணம், பொருளாதாரம், குடும்பத் தேவைகளை ஏதாவது ஒரு வகையில் பூர்த்தி செய்வீர்கள். ஏதோ ஒரு வழியில் நல்லது நடக்கும். 2, 11க்கு உடையவர் வக்கிரமாகி 5 ஆம் வீட்டுக்கு வந்து ராசியைப் பார்ப்பதால் 19 ஆம் தேதிக்குப் பிறகு குரு மேலே வருவதால் நல்ல பலத்தைப் பெறுவீர்கள். குரு பார்வை பெறும்போது நல்ல பண வரவு உண்டாகும். சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகும். நல்ல தொடர்புகள் ஏற்படும்.

ஆரோக்கியம்

5 இல் குரு இருக்கும்போது குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் நன்கு வளரும். முயற்சிகள் கைகூடும். சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். சகோதரர் மூலமாக தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். 3 ஆம் இடம் என்பது சகோதரர் ஸ்தானம். முயற்சி, வெற்றி, விஜய, வீரிய ஸ்தானம். நம்பிக்கை உண்டான 3 ஆம் இடம் 20 ஆம் தேதி வரை நன்றாக இருக்கும்.

லாபம் கொட்டும்

21 ஆம் தேதி தனுசுக்கு செவ்வாய் லாப ஸ்தானத்துக்கு வருகிறார். தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். சுக்கிரனைப் பொருத்தவரை 4 மற்றும் 9 ஆம் அதிபதியாகி 10 ஆம் தேதி வரை துலாமிலும், 11 ஆம் தேதிக்குப் பிறகு விருச்சிகத்திலும் வரப் போகிறார். தொழில் நன்றாக இருக்கும். தாய் தந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தன் சொந்த வீட்டை சுக்கிரன் பார்ப்பதால் வீடு, மனை, சொத்துக்கள், இடமாற்றம் எல்லாம் சாதகமாக இருக்கும்..

மன நிம்மதி

எதிர்பார்த்தபடி மனம் நிம்மதியாக, தெளிவாக இருக்கும். 4, 9க்கு உடையவரான சுக்கிரன் 11 ஆம் இடத்தில் இருக்கும்போது லாபம் நிச்சயமாக கிடைக்கும். லாபம் மற்றும் தொழில் கொடுக்கக் கூடிய மாதமாக இருக்கும். புதன் ராசிக்கு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத வம்பு, வழக்குகள், அவமானங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் பெருகும்

தெய்வ அனுக்கிரகங்கள் நன்றாக இருக்கும். உங்களுடைய நல்ல கர்மாக்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். 7 ஆம் அதிபதியான சூரியனும் ராசிக்கு 10 ஆம் வீட்டுக்கு வருவதால் தொழில் பெருகும். பெருமாளின் அனுக்கிரகம் கிடைக்கும். கணவருக்கு, மனைவிக்கு தொழில் அமையும். புதிய தொழில் அமையும் வாய்ப்புள்ளது. பார்ட்னருடன் தொழில் செய்யும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. சுக்கிரன் பாதகத்தை கொடுக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அச்சப்படத் தேவையில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+