Magaram Rasi Palan: மகர ராசிக்கு தடைகள் தவிடுபொடியாகும்.. லாபம் கொட்டப் போகுது
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் மகர ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

யோகங்கள்
சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மகர ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியினருக்கு உங்கள் ராசியதிபதி வக்கிர நிவர்த்தியாவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உங்களை சுற்றியிருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மன அழுத்தம், விரக்தி போன்றவை ஏற்படும். உங்கள் ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் ஓரளவு நன்மைகள் கிடைத்திருக்கும். வக்கிரம் இல்லாதவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். அதுபோன்ற நிலைமை அனைத்தும் நீங்கும்.
பணவரவு
பணவரவு, பொருளாதாரம், குடும்ப ஒற்றுமை என எல்லாமே சிறப்பாக இருக்கும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். சுக்கிரன் என்பவர் உங்கள் ராசிக்கு 5, 10க்கு உடையவர். அவரும் 10 ஆம் வீட்டில் 10 ஆம் தேதி வரை இருப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். குலதெய்வ அனுக்கிரகம் நன்றாக இருக்கும். குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். 11 ஆம் வீட்டுக்கு வருவதால் உங்கள் உழைப்புக்கான லாபம் கிடைக்கும்.
வெளிநாட்டில் வேலை
குரு 5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் முற்பிறவியில் நீங்கள் செய்த புண்ணியத்துக்கான நன்மைகளைப் பெறுவீர்கள். குரு வக்கிரத்தில் வருவதால் வெளிநாடு பயணங்கள், வெளிநாட்டில் வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். இருமுறைக்கு மேற்பட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். லாபங்கள் பெருகும் வாய்ப்புள்ளது. 4 கிரகங்களின் சேர்க்கை அடைவதால் அதீத லாபங்கள் கிடைக்கும்.
லாபம், வருமானம்
தைரியமாக இருக்கலாம். ஜாதகத்தில் தசாபுத்திகள் நன்றாக இருந்தால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். புதன் 10 ஆம் வீட்டில் இருப்பதால் கடன் வாங்கி தொழில் செய்யும் சூழல் ஏற்படும். 20 ஆம் தேதி 11 ஆம் வீட்டுக்கு வருவதால் தந்தையின் மூலமாக லாபங்களும், வருமானங்களும் ஏற்படும். எதை செய்தாலும் ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications