குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024: வெற்றி மீது வெற்றி.. சனியும் குருவும் தரும் கோடீஸ்வர யோகம்
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். அதிசார சனியால் குரோதி ஆண்டில் ராகு சனி சேர்க்கை ஏற்படப்போகிறது. குரோதி ஆண்டில் கிரகங்களின் மாற்றங்களால் சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரோதி சிம்ம ராசி: சித்திரை மாதம் 18ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்று அமரப்போகிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு சித்திரை முதல் தொழில் குருவாக 10ஆம் வீட்டில் வந்து அமரப்போகிறார். தொழில் ஸ்தான குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6ஆம் வீடுகளின் மீது விழப்போகிறது. சனிபகவானும் கண்டச்சனியாக அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார்.

பதவி யோகம்: பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும். பிசினஸ், தொழில், வியாபாரத்தில் மாற்றம் வரும். பதவியில் புரமோசன் கிடைக்கும். சொத்து, வண்டி வாகனம் வாங்கலாம். உத்யோக உயர்வை தரும். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. உங்க குடும்பம் குதூகலமாகும். பிரச்சினைகள் நிவர்த்தியாகும். பணப்பிரச்சினை நீங்கும்.
வெளிநாடு வேலை: புதிய பதவிகள் தேடி வரும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். வீண் தர்க்கம் வேண்டாம். வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.
குரு பார்வையால் யோகம்: குரு பார்வையால் குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். நான்காம் வீட்டில் குரு பார்வை விழுவதால் வேலையில் இடம் மாற்றம் ஏற்படும், சுகமும் சந்தோஷமும் ஏற்படும். சிலருக்கு வீடு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. ஆறாம் வீட்டில் குருவின் பார்வை விழுகிறது. கடன் பிரச்சினை நீங்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
சனிபகவான்: கண்டச்சனியாக உங்கள் ராசிக்கு நேர் எதிரே சனி பகவான் ஆண்டு முழுவதும் அமர்ந்திருப்பதால் வேலையில் பொறுப்பும் குடும்ப பாரமும். தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும். பணியிடங்களில் பேசும் போது கவனம் தேவை. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. சனி தரும் சச யோகத்தால் செல்வம் வீடு தேடி வரும்.
காதல் மலரும்: உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தம்பதிகள் குரோதி ஆண்டில் ஒன்று சேருவார்கள்.
ராகு கேது: குரோதி ஆண்டு முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வார். தன வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தடைகளை தாண்டி வெற்றி பெறப்போகிறீர்கள். மனக்கவலைகள் நீங்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பேச்சை உங்கள் கண்ட்ரோலில் வைத்துக்கொள்ளுங்கள்.
வெற்றிகள் தேடி வரும்: இந்த ஆண்டு முழுவதும் பண விசயத்தில் வாக்குக் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். மே மாதத்திற்குப் பிறகு வெற்றிகள் உங்களுக்கு தேடி வரப்போகிறது. குரோதி ஆண்டில் கிரகங்களின் பயணம் சாதகமாக இருப்பதால் மகிழ்ச்சியில் திளைக்கப்போகிறீர்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. மிதுன ராசிக்கு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications