கும்ப ராசிக்கு காதல் மலரப் போகுது.. ஆனா பேச்சில் தான் கண்டமே.. ரொம்ப உஷார்
Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்தில் கும்பம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 7 ஆம் அதிபதியான சூரியன் ஆட்சியாகி 7 ஆம் இடத்திலேயே இருந்து ராசியைப் பார்க்கும் சுப மாதமாக இருக்கும். கணவன், மனைவி உறவில் சிக்கல், பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். மூன்றாவது நபர்களால் உங்கள் துணையை தப்பாக நினைத்து பிரிந்து போகலாம் என்ற நிலை இருந்திருக்கும். ஆனால். அந்த நிலைகள் எல்லாம் இந்த ஆவணி மாதத்தில் கணவன், மனைவி ஒன்று சேரும் சூழல் உண்டாகும். பிரியலாம் என்று நினைத்த கணவன், மனைவி கூட மீண்டும் இணையும் யோகம் உண்டு.
காதல் மலரும்
கடந்த இரண்டு வருடங்களில் காதலில் தோல்வி அடைந்து புலம்பி இருப்பீர்கள். இனி உங்களுக்கு புதிய காதலுக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படும். நல்ல விதமாக வாழ்க்கையை தொடங்குவதற்கு அச்சாரம் போடுவீர்கள். மதிப்பு, மரியாதை, கெளரவம் அதிகரிக்கும். 5 ஆம் இடத்தில் இருந்து குரு ராசியைப் பார்க்கிறார். 6 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது பரவாயில்லை என்கிற நிலை ஏற்படும்.
கடன்கள் கிடைக்கும்
வீடு, வாகனம், தொழில் விரிவுபடுத்த கடன் கிடைக்கவில்லை என்று வருந்திக் கொண்டிருந்தவர்களுக்கு மிகப்பெரிய புதிய கடன்கள், நல்ல கடன்கள், வட்டி குறைவான கடன்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். மனதில் சாந்தம் ஏற்படும். மார்ச், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சுறுசுறுப்புடன் செயல்பட ஆரம்பித்திருப்பீர்கள். இதுமாதிரியான அமைப்புகள் உங்களுக்கு தொடரும்.
பாதிப்பு இல்லை
கஷ்டங்கள், சவால்கள், பெரிய பாதிப்புகள் எதுவும் வருவதற்கான வாய்ப்பில்லை. தன்னம்பிக்கை அதிகரிக்கும். 8 ஆம் இடத்தில் செவ்வாய் மறைந்து 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வாய் துடுக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வளர்ச்சிக்காக கடன்களை வாங்குவீர்கள்.
வார்த்தையில் கவனம்
சின்ன விஷயங்களைப் பேசுவது கூட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் வாக்கில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. பேச்சின் மூலமாக விரோதம் வரக்கூடிய அமைப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தினர், உறவினர், பெரியவர்கள், நண்பர்கள் என யாரிடம் பேசினாலும் மனது புண்படும்படி பேசாமல் இருப்பது நன்மை பயக்கும்.
-
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications