கும்பம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. கஷ்டத்திலும் அதிர்ஷ்டம் பெறும் காலம்
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசியினருக்கு துணை விஷயத்தில் கோபம் கொள்ளாமல் இருப்பது நன்மையைத் தரும். குடும்பத்தில் தேவையில்லாத விஷயங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. வெளியிடம், உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் 70 வயதுக்குள் இருக்கும் கும்ப ராசியினருக்கு படிப்படியாக நன்மைகள் ஏற்படும்.
மனக்குழப்பம்
இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் சந்திரன் ராகு சேர்வதால் தேவையில்லா மனக் குழப்பம், மன அழுத்தம், மற்றவர்களை அச்சுறுத்தலாகப் பேசுவது போன்ற அமைப்பு ஏற்படும். நல்லதாகவே இருந்தாலும் தப்பாக தோன்றும் மன நிலை உள்ளது. ஆனால், டிசம்பர் மாதம் முதல் உங்களுக்கு அற்புதமான முன்னேற்றமும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
இடம் வாங்கும் யோகம்
பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் அரசியல்வாதிகளுக்கு பெரிய வெற்றி ஏற்படும். நிறைய நிலம், இடம் வாங்கும் அமைப்பு உள்ளது. பிரச்சனைகள், பஞ்சாயத்துகள் நீங்கும். சட்ட சிக்கல்களை அமர்ந்து பேசி முடிந்து கொள்வது நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். சந்திர மெளலீஸ்வரர் வழிபாடு சகலவித முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
வார்த்தையில் கவனம்
எதிர்பார்க்காத சில விஷயங்களால் யோக பலன்கள் உண்டாகும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. லாபத்தின் அளவு பன்மடங்காக உயரும். லாபம், சுபவிரய பாக்கியம் உண்டாகும். சனிக்கிழமை தோறும் மதிய வேளையில் ஏழைகளுக்கு உணவு தானமாக கொடுப்பது ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். விநாயாகர் வழிபாடு குடும்பத்தில் இருக்கும் சிக்கல், மன வருத்தத்தைப் போக்கும்.


Click it and Unblock the Notifications
