Rasi Palan This Week: கும்பம் ராசிக்கு கடன் பிரச்சனைகள் தீரும்.. பேச்சில் மட்டும் ரொம்ப கவனம்
Kumbam Rasi Palan: ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நிறைய அனுகூலங்கள் காணப்படும். குடும்பத்தில் துணையின் ஆரோக்கியத்தில் சிறிய குறைபாடுகள் ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நன்மையைத் தரும். அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும் நல்ல காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த இழுபறியான நிலைமைகள் மாறும்.
கடன் தீரும்
நம்பிக்கை ஏற்படும். பெரிய அளவுக்கு மகிழ்ச்சி உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். கடன் தொடர்பான விஷயங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். ராகு கேது இருப்பதால் ஏற்றத்திற்கான நல்ல காலகட்டமாக இருக்கும். விநாயகர், துர்க்கை வழிபாடு மேன்மையைத் தரும். விநாயகர் காயத்ரி, துர்க்கை காயத்ரியை தினந்தோறும் படிப்பது, கேட்பது நன்மையைத் தரும்.
பேச்சில் கவனம்
30 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை ஒருவிதமான பயமான உணர்வு ஏற்படும் காலகட்டமாக இருக்கும். 3 ஆம் இடம், 4 ஆம் இடம் சரியாக இருப்பதால் பல் தொடர்பாக இருந்து வந்த பாதிப்புகள் வந்து சரியாகும். பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 4 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் உறவினர்கள், குடும்பத்தினர் இடமாறுவது, வீடு வாங்குவது, அவர்கள் உங்களுக்கு பத்திரிகை கொடுப்பது போன்ற அமைப்பு உள்ளது.
யோக பலன்
தேவையில்லாத பிரச்சனை, சண்டைகள், தொலைதூர பயணங்களில் கவனம் தேவை. கழிவுப் பாதை, அசிடிட்டி, சிறுநீரகம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. யோக பலத்தை அதிகளவில் பெறும் யோகம் உண்டு. எதிர்பார்க்காத வெற்றிகள் ஏற்படும். தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆச்சரியமும், சந்தோஷமும் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும்.
வழிபாடு
சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 70 சதவீதம் நன்றாக இருக்கும். நவக்கிரகத்தில் இருக்கும் ராகு கேதுவுக்கு விளக்கேற்றுவது தடைகளைத் தவிடு பொடியாக்கும். நாகராஜர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Meenam: மீன ராசியினரே கவனம்!.. ஜூன் மாதத்தில் வரப்போகும் சோதனைகள் என்ன? -
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications