Kumbam vaara palan: கும்ப ராசிக்கு குதூகலமான காலகட்டம்.. சொத்துக்களை குவிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Kumbam Lucky zodiac signs

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். பழைய கடன்களை தீர்த்து முடிப்பீர்கள். பண வரவுக்கு உண்டான உத்தரவாதம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அடிவயிறு, கழிவு, முதுகுத் தண்டுவடம், கழுத்துப் பகுதி தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். துணையின் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

ஜெயம்

உறவுகளிடம் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். அடுத்தடுத்து கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.

புதிய வாகன அமைப்பு

பயணங்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களிடம் வாக்குவாதம், தர்க்கம் செய்யாமல் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கூட்டுத் தொழிலில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கோவில் குளங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும்.

சொத்துகள் கிடைக்கும்

தந்தையின் மூலமாக சொத்துகள் வந்து சேரும். அவருடைய உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. பொறுமையாக இருந்து காரியத்தை முடிப்பீர்கள். வாழ்க்கையில் திருப்புமுனையைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படும். அடுத்த ஒரு மாதத்திற்கு வேகமாகவும், பிஸியாகவும் இருப்பீர்கள். நிறைய பேருக்கு ஆசிரியர், தலைமை ஆசிரியர் வேலை கிடைக்கும்.

வழிபாடு

மகிழ்ச்சியையும், அதிகாரத்தையும் கொடுக்கும். பைலட் ஆவதற்கான வாய்ப்புண்டு. நீதிபதி உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூறும் வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது தடைகள், மன அழுத்தம், மன பாரங்கள் நீங்கும். நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வாஹிராஜர் வழிபாடு உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+