Rasi Palan This Week: கும்ப ராசிக்கு தொட்டது துலங்கும்.. 7 நாட்களில் வரப்போகும் குட் நியூஸ்
வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பில் மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு கட்டாயம் மாற்றங்கள் ஏற்படும். ஜென்மத்தில் ராகுவும், ஏழாம் இடத்தில் கேதுவும் இருப்பதால் துர்க்கை கவசத்தையும், விநாயகர் கவசத்தையும் கேட்பது உங்களுக்கு நன்மை பயக்கும். காரியசித்தி மாலையை கேட்டு வருவது எல்லா விதமான சங்கடங்களும், மன அழுத்தமும் தீரும்.
ஆரோக்கியம்
வயிறு சார்ந்த பிரச்சனைகள், கழுத்துப் பகுதி பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய ராசியினராக இருப்பீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு நிமித்தமாக டக்கென்று செய்யக்கூடிய விஷயங்களில் எல்லாம் வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
தொட்ட காரியங்களில் வெற்றி
இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறி அடுத்தடுத்து உங்களுடைய வேலையை எல்லாம் செய்து முடிப்பீர்கள். திட்டமிட்டு செய்யக் கூடிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கழிவுப் பகுதிகள், முகத்தில் உள்ள உறுப்புகளில் அதீத கவனம் தேவை. எதிரிகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது நல்லது.
யோகம்
சகலவிதமான விஷயங்களிலும் யோகமும், அனுகூலமும் ஏற்படும். தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications