Rasi Palan This Week: கும்ப ராசிக்கு இனி எல்லாமே ஏறுமுகம் தான்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

குரு பகவான் மிதுன ராசியில் வக்கிரமாக இருக்கிறார். கேது சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன் தனது பயணத்தை துலாம் ராசியில் இருந்து தொடங்குகிறார். 4 கிரக சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படுகிறது. ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேஷம் செய்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து நகர்ந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு விரயத்தில் நிறைய கிரகங்கள் சேரப் போகின்றன 15 ஆம் தேதிக்கு முன்பு வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த இரண்டு, மூன்று நாட்கள் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். நண்பர்களால், மூத்தவர்களால் லாபம் கிடைக்கும். நிறைய விருதுகள், அங்கீகாரங்கள் கிடைக்கும். 15 ஆம் தேதிக்குப் பிறகு ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.
ஆரோக்கியம்
கால் பாதம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வேலை இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். வேலையில் நிறைய அழுத்தம் ஏற்படும். இருக்கிற வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாறும் சூழல் ஏற்படும். வீட்டில் பாட்டி, தாத்தா இருந்தால் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தடைகள் வரும்
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு சிறிது எதிர்மறையாக இருக்கும். பயணங்களில் தடைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவது போன்ற நிலை ஏற்படும். எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. புரிதல் மிகவும் கம்மியாக இருக்கும். ஆன்மிகத் தேடல் அதிகரிக்கும்.
தர்க்கம் வேண்டாம்
குடும்பத்தில் துணையுடன் தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். லாபம், சந்தோஷம், முதலீகள், புதிய வரவு ஏற்படும். கும்ப ராசியினர் இருக்கும் வீட்டில் நிறைய சபகாரியங்கள் நடக்கும். ஆணாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
தொழில், வியாபாரம், படிப்பு, முதலீடுகள் சார்ந்த விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நன்மை பயக்கும். வயிறு, முதுகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. நவக்கிரக வழிபாடுகள் சிறந்த பரிகாரமாக இருக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும்.
வாய்ப்புகள் தேடி வரும். சில இடங்களில் இழப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷம் ரீதியாக 65 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 70 சதவீதமும் நன்மைகள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications