கும்ப ராசிக்கு சொத்துகளை குவிக்கும் யோகம்.. தொட்டதெல்லாம் துலங்கும்.. வார்த்தைகளில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத கிரக நிலை

எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

kumbam-rasi-palan-what-kind-of-benefits-will-get-kumbam-aquarius-rasi-people-during-the-month-of

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய அனுகூலங்கள் காணப்படும். தொடர்ச்சியாக இருந்த கஷ்டங்கள், மனதில் இருந்து வந்த பாரங்கள் அனைத்தும் நீங்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதையும், உங்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதையும் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

மகிழ்ச்சி

வெளியிடங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சுப விரையங்கள் ஏற்படும். சுப அமைப்புகள் உள்ளதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். முதலீடு விஷயங்களில் அனுகூலங்கள் காணப்படும். தாய் வழி, தந்தை வழி உறவு விஷயங்களில் சந்தோஷமும், லாபமும், ஏற்றமும் உண்டாகும். இதுவரை மனதில் இருந்து வந்த பாரங்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.

வீடு, வாகன யோகம்

வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும் நல்ல காலகட்டம், வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது, தொழிலை விரிவுபடுத்துவதற்கு போன்றவற்றிற்கு கடன் கிடைக்கவில்லை என்று வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய கடன்கள், நல்ல கடன்கள், வட்டி குறைவான கடன்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். டரும்.

பாதிப்பு இல்லை

மனதில் சாந்தம் ஏற்படும். இனி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். சவால்கள், பெரிய பாதிப்புகள் எதுவும் வருவதற்கான வாய்ப்பில்லை. தன்னம்பிக்கை அதிகரிக்கும். 8 ஆம் இடத்தில் செவ்வாய் மறைந்து 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வாய் துடுக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வளர்ச்சிக்காக கடன்களை வாங்குவீர்கள்.

காதல்

காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு புதிய காதல் பிறக்கும். மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். இனி தொட்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு துலங்கும் யோகம் உள்ளது. வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது வாழ்க்கையில் ஏற்றத்தை ஏற்படுத்தும். நரசிம்மர் வழிபாடு அனைத்து விஷயங்களிலும் ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+