Kumbam: கும்ப ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகுது
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் கும்ப ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam rasi palan)
கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு களத்திர ஸ்தானாதிபதியான 7 ஆம் அதிபதியான சூரியன் 2 ஆம் இடத்தில் மாதம் முழுவதும் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ராசிநாதனும், 7 ஆம் அதிபதியும் இணைந்து இருக்கின்றனர். கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய மாதமாக இருக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
வேலைவாய்ப்பு
குடும்ப நலன், குடும்ப மேன்மை அதிகரிக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யும் குணாதிசயம் கொண்டவர் நீங்கள். அதுபோன்ற உறுதித்தன்மை உங்களுக்கே புலப்படக் கூடிய சிறப்பான மாதமாக இருக்கும். இந்த துறையில் இதற்கு மேல் சாதிக்க முடியாது என்ற கைவிட்ட தொழிலிலே உங்களுக்கு கைகொடுக்கக் கூடிய யோகம் உண்டாகும். புதிதாக சிலருக்கு வேலை கிடைக்கும்.
தொழிலில் ஏற்றம்
புதிதாக ஆரம்பிக்கக்கூடிய தொழில்கள் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் இதுவரை சுணங்கிப் போயிருந்தவர்கள் கூட இனி உற்சாகமாக செயல்படக்கூடிய அமைப்பு உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நல்ல மருத்துவ ஆலோசனைகள், நல்ல மருந்துகள் கிடைக்கும். மருத்துவ முறைகள் பலிக்கும்.
மாற்றம் உண்டாகும்
சிலருக்கு வாக்குகள் நிறைவேறும் யோகம் உண்டாகும். கடந்த காலங்களில் நிறைய விஷயங்களை செய்ய முடியவில்லை என்பதால் கெட்ட பெயர் பெற்றிருப்பீர்கள். இழந்த நற்பெயரை திரும்பப் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். உங்களுடைய மாற்றங்கள் வெளிப்படையாக மற்றவர்களுக்குத் தெரியும் வகையில் நடந்து கொள்வீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்
முன்னேற்றம்
நல்ல பாசிட்டிவான மாதமாக இருக்கும். பெண்களுக்கு குடும்பக் கவலைகள் பரிபூரணமாக நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றத்தைத் தரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். சகலவித துன்பங்களும் நீங்கி நன்மைகள் பெறக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் அபரிமிதமான நன்மைகள் உண்டாகும்.
-
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications