Rasi Palan This Week: கும்ப ராசிக்கு குபேர யோகம்.. பணத்தில் நீச்சலடிக்கும் நேரம்

Subscribe to Oneindia Tamil

Kumbam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kumbam-rasi-palan-what-kind-of-benefits-will-get-kumbam-rasi-people-from-march-2-to-8

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)

கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு செல்வாக்குகள் கூடக்கூடிய நல்ல காலகட்டம். தொழில், உத்தியோக அபிவிருத்தி ஏற்படும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களை மேற்கொள்பவர்களிடம் தொடர்பு கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

தொட்டது துலங்கும்

யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. மேலதிகாரிகள் விஷயத்தில் தர்க்கம், வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த தடைகள் எல்லாம் தவிடு பொடியாகக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்

பண வரவு

கணக்கு வழக்குகள், ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் நீங்கி, அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். பண வரவிற்குப் பஞ்சமே இருக்காது. முக லட்சணம் ஏற்படும். வைரம், தங்கம் வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். இந்த வாரத்தில் மூக்குத்தி, கம்மல், செயின் போன்ற தங்க நகைகளை வாங்கிக் குவிக்கும் யோகம் உண்டாகும்.

முதலீடு

தன வரவு நன்றாக இருக்கும். அடுத்த ஒரு மாதத்துக்கு பண வரவு நன்றாக இருக்கும். மனைவி மூலமாக, கணவர் மூலமாக பண வரவு உண்டாகும். பேசினால், திட்டமிடுவதால் பண வரவு ஏற்படும். துணையின் பேச்சைக் கேட்டு நடந்தால் அற்புதமான யோகம் ஏற்படும். பணத்தை முதலீடு செய்வீர்கள். முழு தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.

வழிபாடு

கை, கால்களில் கண், தலை வலி, முதுகுத் தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆஞ்சநேயர், பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அனுமன் சாலிஷா கேட்பது நன்மையைத் தரும். சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+