Rasi Palan This Week: கும்ப ராசிக்கு பணத்தை அள்ளி கொடுக்கும் கிரகங்கள்.. வார்த்தையில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

Kumbam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். [Kumbam rasi palan]

kumbam-rasi-palan-what-kind-of-benefits-will-get-kumbam-rasi-people-from-march-9-to-15

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.

அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)

கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வரும் 12 ஆம் தேதியில் இருந்து அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். செவ்வாய், ராகு, புதன் என ஏராளமான கிரகங்கள் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு நடந்த பிரச்சனைகள் எல்லாமே சாதகமாக மாறும். லாப ஸ்தானத்தில் சந்திரன் குரு பார்வையில் அமர்ந்திருப்பதால் நண்பரால், மூத்தவர்களால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

அதிர்ஷ்டம்

கோயிலுக்குச் செல்வதால் அதிர்ஷ்டம் ஏற்படும். திருமணம் உறுதியாகும். திருமண நிச்சயதார்த்தங்கள் நடைபெறும். புதிய விஷயங்களை எடுத்து ஜெயிப்பதற்கான யோகம் உண்டாகும். பல நல்ல காரியங்கள் நடக்கும். எந்த விஷயத்தை குறி வைத்தாலும் அவை அற்புதமாக நடக்கும் யோகம் உண்டாகும். எதற்காகவும், யாருக்காகவும் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை.

பண வரவு கொட்டும்

சனி, சுக்கிரன் அமர்ந்திருப்பதால் பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. பண வரவுகள் நன்றாக இருக்கும். காலபுருஷனுக்கு 12 ஆவது வீடு என்பதால் சுபவிரயங்கள் கொடுக்கும். வேலைக்காக முதலீடு செய்வது போன்ற முன்னேற்றப் பாதைகளில் செல்வீர்கள். நிறைய பேருடைய தொடர்புகள் கிடைக்கும். புதிய புதிய ஐடியாக்கள் கிடைக்கும். யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

ஆரோக்கியம்

வயிறு, மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. சிலருக்கு காது, மூக்கு, தொண்டை, சளி, சைனஸ், ஒற்றை தலைவலி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகம், வெளியிடம், தொழிலில் வாக்குவாதம் இல்லாமல் இருப்பது பெரிய வெற்றியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தித் தரும்.

வெற்றி

பலவிதமான நன்மைகளும், சந்தோஷமும் காணப்படும். யோக பலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். பெரிய நம்பிக்கையும், ஏற்றமும் ஏற்படும். வார்த்தையில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

வழிபாடு

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. வாழ்க்கையில் இதுபோன்ற காலகட்டம் இனி வராது. தைரியமாக இருக்கலாம். சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும். ஆதி கும்பேஸ்வரர் வழிபாடு நல்ல முன்னேற்றத்தைத் தரும். நவக்கிரகத்தில் இருக்கும் ராகு வழிபாடு நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+