கும்பம் ராசிக்கு அடுத்தடுத்து வரும் யோகம்.. பதவி, வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 3 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kumbam-rasi-palan-what-kind-of-benefits-will-kumbam-rasi-people-get-from-august-19-to-23

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 3 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் உச்ச பலத்தில் அமருவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். அரசியல், அரசாங்கம், வீடு, வண்டி, வாகனம், பிளாட் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய லோன், கடன் கிடைக்கும். நல்ல பொறுப்பு, பதவியில் அமருவீர்கள். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எந்த விஷயத்தையும் அவசரப்படாமல் ஆலோசிக்காமல் எடுப்பது நன்மை பயக்கும்.

ராஜபலம்

ராஜபலத்தில் சூரியன் கேது இருப்பதால் பெரிய அளவில் வெற்றி, மற்றவர்களால் லாபமும் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள், பப்ளிக் சார்ந்த விஷயங்களில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இளைய சகோதரன், சகோதரி வீடு வாங்கும் யோகம் உண்டாகும். துணை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

கவனம்

மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நன்மை பயக்கும். பயணங்கள் சமயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருப்பின் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

முன்னேற்றம்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். பெரிய பலம் கிடைக்கக்கூடிய காலகட்டம். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நல்லவை நடக்கும். துணை விஷயத்தில் மட்டும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். 70 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொழில், வியாபாரம், வேலை, படிப்பு விஷயத்தில் உங்கள் கோபத்தால் மட்டுமே சிக்கல் வருவதற்கான வாய்ப்புள்ளது. மற்றபடி அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். பழைய பகைகளை தேவையில்லாமல் தொந்தரவு செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது. அவர்களுடயை ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். வீரபத்திரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+