லட்சுமி நாராயண யோகத்தால் மேஷம் ராசிக்கு வரும் அதிர்ஷ்டம்.. 66 நாட்கள் சொல்லி அடிப்பீங்க
Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் மேஷ ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.

புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், மிதுனம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, மேஷம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும்.
அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் மேஷ ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசியினருக்கு அடுத்த 66 நாட்கள் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நல்ல கணவன், மனைவி அமையக்கூடிய யோகம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான நல்ல அமைப்பு உள்ளது. பார்ட்னர்ஷிப், தொழிலில் ஏற்றங்கள் ஏற்படும். மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். எடை குறையும். ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். குறிப்பாக, கண் பாதிப்புகள் நீங்கும்.
லட்சுமி நாராயண யோகம்
நட்பு வட்டாரங்கள் விரிவடையும். பகை தீரும். குடும்பத்தினருடன் சேர்ந்து நிறைய சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்க்காத பரிசுகள், ஆதரவுகள் கிடைக்கும். சுக்கிரன் புதன் இரண்டும் சேர்ந்து 7 ஆம் இடத்தில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. ஒரே வயதை ஒத்தவர்கள் சேரக்கூடிய அமைப்பு ஏற்படும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு திருமணம் நடக்கும்.
ஆரோக்கியம்
பெண் குழந்தை பிறப்பதற்கான பாக்கியம் உண்டாகும். பெண்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பின்பகுதியில் வலி, வேலையில் அழுத்தம் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். மேலதிகாரியின் குடைச்சல் சரியாகும். தலைமை அதிகாரியாக இருக்கக்கூடியவர்கள் கவனம் தேவை. ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
அடுத்தடுத்து யோகம்
நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். லட்சுமி நாராயணப் பெருமாள் வழிபாடு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். திருமண யோகம் ஏற்படும். கணவன், மனைவி பெயரில் வீடு கிரகப்பிரவேஷம் செய்வீர்கள். தொழிலில் ஏற்றம் ஏற்படும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். வெளியூர் செல்லும் அமைப்பு நல்லது. 20 நாட்களுக்கு எதிரி தொல்லைகள் இருக்கும். புதிதாக வரும் உறவுகளால் ஏற்றம் உண்டாகும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 90 சதவீதம் அற்புதமாக அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications
