விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. 66 நாட்களில் நடக்கப்போகும் அதிசயம் என்ன?
Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் விருச்சிகம் ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.

புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், சிம்மம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, ரிஷபம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும்.
அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியினருக்கு இடமாற்றம் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். வீடு, நிலம், வண்டி, வாகனம், கல்வி தொடர்பான விஷயங்களுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். கிரெடிட் கார்டு மாற்றுவீர்கள். புதிய சேவிங், கரண்ட் அக்கவுண்ட் தொடங்குவீர்கள். விரயத்தில் சுக்கிரன், புதன் பலமாக லட்சுமி நாராயண யோகத்துடன் இருக்கும்போது அடுத்த ஒன்றரை மாதத்திற்கு நண்பர்களால், மூத்தவர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
குரு அருள்
வீட்டில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். சுப விரயம் ஏற்படும். கணவனாக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்தையும், மனைவியாக இருந்தால் கணவரின் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். கால் முட்டி, அடிவயிறு தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. விட்டமின் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குரு பலமாக பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
வெளிநாடு யோகம்
பாசிட்டிவான விஷயங்கள் நிறைய நடக்கும். பள்ளி, கல்லூரிகள், பேராசிரியர்கள், கட்சியில் இருப்பவர்களுக்கு பதவி போவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய சர்ச்சையில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. போஸ்ட் ஆபிஸில் பணம் போடுவது, வங்கியில் ஆர்டி, எஃப்டி போடுவது போன்றவற்றைச் செய்வீர்கள். வீட்டில் தங்குவதற்கான வாய்ப்பு குறையும். வெளியூர், வெளிநாடு என இருப்பீர்கள். வெளியில் சாப்பிடுவீர்கள்.
பணவரவு
பண வரவுக்குப் பஞ்சமே இருக்காது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பள்ளிகொண்ட பெருமாள் வழிபாடு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஸ்ரீரங்கம் தாயாரையும், ரங்கநாதரையும் சென்று வழிபாடு செய்வது நன்மை பயக்கும். கணவன், மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
இடம் வாங்கும் யோகம்
வேலையில் ஏற்றம் ஏற்படும். தொலைதூரத்தில் இடம் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு யோகம் ஏற்படும். விசா கிடைக்கும். வெளியூரில் செட்டிலாவது, வேறொரு கிளைக்கு வேலைக்குச் செல்வது போன்ற சூழல் ஏற்படும். படிப்படியாக தடைகள் விலகும்.
சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 80 சதவீதம் ஏற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாமல் குறுஞ்செய்தி அனுப்புவது, பெண்களிடம் பேசுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.


Click it and Unblock the Notifications
