சிம்ம ராசியினருக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. இந்த 2 விஷயத்தில் அதிக கவனம் கவனம்
சிம்ம ராசி பலன்: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டு பிறந்தவுடனே குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. ஏற்கனவே சனிப்பெயர்ச்சியும் நிகழ்ந்துள்ளது. இது சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், சாதக பாதக பலன்களை இந்த கட்டுரையில் காணலாம்.
சிம்மம் சூரியன் ஆதிக்கம் இருக்கும் ராசி. சனி தற்போது உங்களின் எட்டாவது இடத்தில் உள்ளார். அதாவது அஷ்டமத்து சனி தொடங்கியுள்ளது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் உண்டாகும். அஷ்டம சனியை நினைத்து பயப்பட தேவையில்லை குரு பகவான் ஐந்தாம் இடத்தை பார்க்கவுள்ளார். இது பூர்வ புண்ணிய ஸ்தானமாகும்.

அந்நியோன்யம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்த்தால் எப்பேற்பட்ட பிரச்னைகளும் நிவர்த்தியாகும். பழைய எதிரிகள் அமைதியாவார்கள். பெற்றோர் உறவால் ஆதாயம் அடையும். திருமணத் தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். காதல் உறவில் இனிமை கூடும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
ஏற்றம்
உண்மையில் அஷ்டம சனியில் பல்வேறு சாதனைகளை படைக்க போகிறீர்கள். முக்கியமாக அரசு மற்றும் அரசியல் துறை சம்பந்தப்பட்டவர்கள் நல்ல ஏற்றத்தை காண்பார்கள். உடல் நலத்தில் மட்டும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நலம் தரும். வெளியூர், வெளிநாடு சம்பந்தப்பட்ட பல்வேறு பயணங்களை மேற்கொள்வீர்கள்.
தொழில்
குரு 11 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆவதால் நிலம், வீடு, வண்டி, வாகனம் உள்ளிட்ட சொத்துகள் சேரும். முதலீடுகளில் சிறப்பான லாபம் கிடைக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். நீண்ட காலமாக புதிய தொழில் தொடங்க நினைப்போர் இந்த காலத்தில் புதிய தொடங்குவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் கிடைக்கும்.
கவனம்
சிம்ம ராசியினர் முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனம் இயக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். சிம்மம் ராசியினருக்கு பிரச்னைகளுடன் கூடிய காதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் காதலில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். முடிந்தவரை கோபத்தை குறைத்துக் கொண்டால் இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் குவியும்.
ஆரோக்கியம்
முக்கியமாக ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். நரம்பு, தலை, கால் பாதம், ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்னை ஏற்பட்டால் கூட அலட்சியமாக இருக்காமல் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications