தனுசு ராசியினருக்கு சூப்பர் மாற்றங்கள் வரப்போகுது.. ஆனா வாயிலதான் கண்டம்
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். 4 ம் இடத்தில் சூரியன், செவ்வாய், ராகு, சனி போன்ற பாவர்கள் இருப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தரும். அம்மாவுக்கும், பிள்ளைகளுக்கும் சில பாதிப்பு உண்டாகும். தூர இடத்தில் இருக்கும் நபர்கள் அம்மாவை பார்க்க முடியாத சூழல் ஏற்படும். சிலருக்கு வேலைக்காகவோ, கல்விக்காகவோ பிரிந்து செல்லும் சூழல் ஏற்படும். தாயின் உடல் நிலையில் சில பிரச்சனைகள் வரும்.
50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடு கட்டுவதில் சிறு சிறு தடைகள் உண்டாகும். ஏற்கனவே வீட்டை கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இளைஞர்களுக்கு வண்டி வாகனம் சார்ந்த விஷயங்களில் நெருக்கடி உண்டாகும். 15 ஆம் தேதிக்குப் பிறகு பாக்கியாதிபதி சூரியன் உச்சம் அடைவதால் வேலை அமைப்பில் அருமையான மாற்றங்கள் உண்டாகும்.
அரசு வேலைக்காக தேர்வுகள் எழுதியவர்களுக்கு, அரசு வேலைக்கான கோச்சிங் சென்டர் செல்லுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு, நல்ல முடிவுகள் வந்து சேரும். தந்தையின் உடல்நிலையை குறித்து கவலைப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். சித்தப்பா, பெரியப்பா மக்கள் உறவுகளிடம் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி சுமூகத் தீர்வு கிடைக்கும்.
வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு சாதகமான நிலை ஏற்படும். குரு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். அடுத்த மாதத்தில் 7 ஆம் இடத்துக்குப் போகிறார். 5 ஆம் அதிபதியான செவ்வாய் 8 ஆம் இடத்தில் மறைந்து நீச்சமாகிறார். இந்த மாதம் பெரும் பகுதி நீச்சத்தில் இருக்கப் போகிறார். 2 ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் துடிப்பாக பேசும் நபராக மாறுவீர்கள். பேச்சுவார்த்தையில் கனிவை கடைப்பிடிப்பது நல்லது.
கடும் சொற்கள், நெருப்பு போன்ற வார்த்தைகளை பேசும் காலகட்டமாக இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி எந்தவொரு கஷ்டமும், பாதிப்பும் உங்களுக்கு ஏற்படாது. மாற்றத்தை தரும் மாதமாக இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு அமையும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications