மீன ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பம்.. பண விஷயத்தில் ஜாக்கிரதை.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் போச்சு

Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

Monthly rasi palan Meenam

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம்: மீனம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி ஆரம்பமாகியுள்ளது. பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை. உங்கள் ராசிநாதன் ஏப்ரல் மாதத்தில் பரிவர்த்தனை அடைந்துள்ளார். ஜென்மசனி என்பது உங்கள் எண்ணங்களை மழுங்கடித்து, மனதை திசைத் திருப்பக்கூடிய அமைப்பாக இருக்கும். தவறான முடிவை எடுக்க வைக்கும் காலகட்டமாக இருக்கும்.

தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்க கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருந்தாலே போதும். ராசிநாதன் பரிவர்த்தனையில் இருப்பதாலும், தனாதிபதி 5 ஆம் இடத்தில் நீச்சமாவதால் பிள்ளைகளால் எதாவதொரு செலவுகள் வரும். சந்தோஷச் செலவுகளே உண்டாகும். மனதில் தைரியமில்லாத பதட்ட நிலைகள் உண்டாகும்.

50 வயதை தாண்டிவர்களுக்கு ஜென்மசனி ஒன்றுமே செய்யாது. 40 வயதுக்கு கீழானவர்களுக்கு பணத்தை புரியவைக்கும் அமைப்பாக இருக்கும். காது, பணம் விஷயத்தில் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. பேராசைப்பட்டு எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் உச்சமாவதால் கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏதாவதொரு பிரச்சனை ஏற்படும்.

கண் சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை, கண் பிரச்சனை போன்றவை உண்டாகும். அரச விரோதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எல்லா விதத்திலும் நெளிவு சுழிவுடன், விட்டுக்கொடுத்து இணக்கமாகச் செல்வது நல்லது. மனதை தைரியமாக வைத்துக் கொள்ளும் மாதமாக இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு இருக்கும். எந்த விஷயத்தை செய்தாலும் யோசித்து முடிவெடுப்பது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+