மேஷம் ராசிக்கு தொழிலில் வெற்றி.. ஏப்ரல் மாதத்தில் நடக்க போகும் சூப்பர் மாற்றங்கள்
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலம்.
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு 5 கிரகங்கள் 12 ஆம் இடத்தில் கூடியுள்ளன. ஐந்து கிரகங்களும் ராசியில் இருப்பது சுபச் செலவுகளை உண்டாக்கும் காலகட்டமாக இருக்கும். பணம் கையில் இருப்பதால் ஏதாவதொரு செலவு வந்து கொண்டே இருக்கும். இந்த மாதத்தின் மூன்றாவது, நான்காவது நாட்களிலேயே செவ்வாய் நீச்சம் அடைகிறார்.
பொதுவாக ராசிநாதன் பலவீனமானால் மனதில் குழப்பம் ஏற்படும். எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் அதீத சிந்தனை, குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். கையில் பணம் தங்காத சூழல் இருக்கும். செலவுகள் அதிகமாக ஏற்படும். பணம் சேமிக்க வேண்டும் என்று மாதத்தை தொடங்கினாலும் சேமிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இருப்பினும், 6 ஆம் இடத்தில் கேது இருப்பதால் கடன் வாங்காத அளவுக்கு வருமானம் ஏற்படும். வருமானத்துக்கு ஏற்ப செலவுகளும் உண்டாகும். முதல் 15 நாட்களில் தடைகள், தாமதம் ஏற்படும். 16 ஆம் தேதி முதல் 5 ஆம் அதிபதியான சூரியன் ராசியில் உச்சம் அடைவதால் நல்ல அமைப்பாக இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் வரும் சூழல் ஏற்படும். இளைய பருவத்தினருக்கு காதல் சார்ந்த விஷயங்கள், லட்சியங்கள், திருமணம், வேலைகளில் நல்லது நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
அரசு வேலை சார்ந்த விஷயங்களில் முயற்சி மேற்கொள்பவர்களுக்கு வேலை அமைப்புகள் உண்டாகும். அப்பா, குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. வேலை மாற்றங்கள் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். விரைய சனி பெரிய பாதிப்புகளைக் கொடுக்காது என்பதால் இந்த மாதம் உங்களுக்கு ஏற்றம் நிறைந்த மாதமாக இருக்கும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications