Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandra Grahan 2025: ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று இரவு நடைபெறுகிறது. இந்த சந்திரகிரகணத்தால் மூன்று ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. மூன்று ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

lunar-eclipse-2025-3-zodiac-signs-people-get-jackpot-good-benefits-and-fortunes-during-this-chandr

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவுக்கு புண்ணியம் கிடைக்கும். முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும்.

இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். இந்த சந்திரகிரகணத்தால் தனுசு, ரிஷபம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசி, லக்கினக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கம். மூன்றாம் இடம் என்பது உங்களுடைய வலிமையைக் காட்டக்கூடியது. எந்த அளவுக்கு நீங்கள் பலமானவர்கள், எந்த அளவுக்கு தைரியமாக ஒரு விஷயத்தை எதிர்கொள்வீர்கள் என்பதற்கான விஷயங்கள் ராகு 3 ஆம் இடத்தில் இருக்கும்போது மட்டும்தான் நடக்கும். சந்திரன், ராகு தொடர்பு இருப்பதால் நிறைய பேர் புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புள்ளது. ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான காலகட்டமாக இந்த 40 நாட்கள் இருக்கும்.

குழந்தைப் பேறு உண்டாகும் வாய்ப்புள்ளது. அடுத்த 40 நாட்கள் அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீட்டை விற்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் வீட்டை விற்கும் யோகம் உண்டாகும். துபாய், அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தவர்கள் செல்லும் யோகம் உண்டு. நிறைய பணம் சம்பாதிக்கும் சூழல் உண்டாகும். ஏஐ துறை, டேட்டா பேஸிஸ், டேட்ட மைனிங், சாஃப்ட்வேர் துறை, போட்டோகிராபர் சினிமோட்டேகிராஃபர் ஆவது, மீடியாவில் இருப்பவர்களுக்கு பெரிய வெளிச்சம் உண்டாகும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

மற்றவர்களின் தவறுகள் இனி உங்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும். புதிதாக வண்டி வாங்கும் யோகம் உண்டு. வீட்டில் ஆரோ சிஸ்டம் மாற்றுவீர்கள். தம்பியுடன் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். வெளியூரில் இருக்கும் அக்கா, தங்கையுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒன்று சேருவீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வது நன்மை பயக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி, லக்கினக்காரர்களுக்கு இந்த சந்திரகிரகண காலகட்டத்துக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஜாக்பாட்டான நேரம் இது. அடுத்த 45 நாட்களுக்குள் உத்தியோகம், வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரத்தில் என அனைத்திலும் அனுகூலம் ஏற்படும். பாவிகள் 10 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பது நல்லது. அங்கு ராகு அமர்ந்திருக்கிறார். அங்கு சந்திரனும் சேர்வதால் இடமாற்றம் உண்டாகும். இடமாற்றம் ஏற்படும்.

உத்தியோகத்தில் பெரிய பொறுப்பு, பதவிகளில் அமரும் வாய்ப்பு. வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரத்தில் டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். நிறைய பேருக்கு தேவையான பணம் வந்து சேரும். மாமியாருக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், எதிர்பாராத நன்மைகள் நடப்பதற்கான காலகட்டமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

அலுவலகத்தில் டூர் போன்றவை செல்லும்போது தலைமை, பொறுப்பை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மற்றபடி இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் 95 சதவீதம் நன்மைகள் பெறும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, தொழிலில் ஏற்றம், அபரிமிதமான லாபம் கிடைக்கக் கூடிய அற்புதமான காலகட்டம்.

கன்னி

கன்னி ராசி, லக்கினக்காரர்களுக்கு ஏ கிளாஸ் யோகமான காலகட்டமாக இருக்கும். பர்மெனன்ட் வேலை கிடைக்கும். கோர்ட், கேஸ், பஞ்சாயத்து போன்றவை தீரும் காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த அழுத்தங்கள் தீரும். எதிர்பார்க்காத பெரிய பணம் வரும். பெரிய அளவிலான கடன்கள் கிடைக்கும். ஒரு வீட்டை விற்று பெரிய வீடு கட்டும் யோகம் உள்ளது. சித்தி, பெரியம்மாவின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

இந்த காலகட்டத்தில் மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டாலும் காசு, பணத்துக்கு குறைவிருக்காது. 6 ஆம் இடம் எனும் ஸ்தானத்தைப் பொருத்தவரை 85 சதவீதம் பணத்தைக் கொடுக்கும். அதிகாரத்தையும், நான் என்கிற எண்ணத்தையும், திமிர் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். அந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் காலகட்டம்.

குழந்தைகளின் பற்களில் சிறு சிறு பிரச்சனைகள் வரும். அதற்காக செலவு செய்யும் சூழல் உண்டாகும். நிறைய பேருக்கு பர்மெனென்ட் வேலை, வங்கியில் வேலை கிடைக்கும். மெடிக்கல் சீட்டுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல கல்லூரியில் சீட் கிடைக்கும். மருத்துவர்கள் நிறைய பேர் உருவாவதற்கான வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+