Chandra Grahan 2025: கடக ராசிக்கு அஷ்டமத்திலும் அதிர்ஷ்டம்.. யோகமான காலகட்டம்.. என்ஜாய்
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. இந்த சந்திரகிரகணத்தால் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவுக்கு புண்ணியம் கிடைக்கும்.
5 ராசியினர் கவனம்
முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதனால், மன சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அழுத்துவது போன்று இருக்கும். 40 நாட்களுக்கு இதுபோன்ற நிலைமையே தொடரும்.
யோகமான ராசி
இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
இந்த சந்திரகிரகணத்தால் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசி, லக்கினக்காரர்களுக்கு விடுதலை பெறும் காலகட்டமாக இருக்கும். அஷ்டமத்தில் ராகு அமர்ந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்ந்திருக்கிறார். அஷ்ட ஸ்தானத்தில் ராகுவுடன், சந்திரனும் அமர்ந்திருக்கிறது. கிரகணம் அஷ்டமத்தை தடை செய்வதால் உங்களுக்கு வரும் கெட்டவை எல்லாம் நல்லவையாகும் காலகட்டமாக இருக்கும். எந்த பாதிப்புகள் வந்தாலும் அவை அனுகூலமாக மாறக்கூடிய நேரமாக இருக்கும்.
அஷ்டமத்திலும் அதிர்ஷ்டம்
அஷ்டமம் என்பது சண்டை, சச்சரவு, அவமானம், எதிர்பாராத நஷ்டம், பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வது போன்றவை உண்டாகும். இப்போது ராகுவும், சந்திரனும் அஷ்டமத்தில் அமர்வதால் எல்லா விதமான துர்சம்பவங்களும் நீங்கும். இரவு நேரத்தில் உணவு விற்பவர்கள், டிரான்ஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், வண்டி வாகனங்கள் ஓட்டுபவர்கள் ஆகியோருக்கு எதிர்பாராத விஷயங்கள் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
வீடுகள் விற்கும் யோகம்
அஷ்டம ஸ்தானத்தில் ஒரு கிரகம் கிரகண தோஷத்தில் இருக்கும்போது விற்கவே முடியாத வீடுகளை முடிப்பீர்கள். சொத்து கையை விட்டு போனாலும் அதன் மூலம் லாபம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக அடைக்க முடியாத பெரிய கடன்களை எல்லாம் அடைத்து முடிப்பீர்கள். உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பண வரவு
தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 75 சதவீதத்திற்கும் மேல் உங்களுக்கு நன்மை கிடைக்கும். கடகத்தைப் பொருத்தவரை எதிர்பாராத பண வரவு, அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கம். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் அனைத்தும் நடக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். 40 நாட்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும்.
பரிகாரம்
எதிர்பாராத நல்ல விஷயங்கள் கிடைக்கும். கலசத்தில் பச்சரியை வைத்து, ஒரு துண்டு தர்ப்பை, குறைந்தபட்சமாக 11 ரூபாய் வைத்து வேத விற்பன்னர்களுக்கு தானமாகக் கொடுப்பது அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications