Chandra Grahan 2025: கும்பத்துக்கு கண்டம் மேல் கண்டம்.. சுத்து போடும் சந்திரன், ராகு.. ரொம்ப கவனம்
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. இந்த சந்திரகிரகணத்தால் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் கன்னி 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவுக்கு புண்ணியம் கிடைக்கும்.
5 ராசியினர் கவனம்
முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதனால், மன சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அழுத்துவது போன்று இருக்கும். 40 நாட்களுக்கு இதுபோன்ற நிலைமையே தொடரும்.
யோகமான ராசி
இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
இந்த சந்திரகிரகணத்தால் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
சந்திர கிரகணமே பூரட்டாதி நடசத்திரத்தில் தான் நடக்கிறது. கும்ப ராசி, லக்கினக்காரர்களுக்கு அபாயமான காலகட்டம் தான். இதுவரை நாம் செய்யும் விஷயங்கள் மற்றவர்களுக்குப் பிடிக்காமல் இருப்பதால் நம் சூழ்நிலை சரியில்லை. உடம்பில் ஏதோ பிரச்சனை என்பதால் தான் இப்படி இருக்கிறோம் எனும் கவலை. தாயினால் சங்கடம். தாய்க்கு, மாமியாருக்கு ஆரோக்கிய குறைபாடு. நாம் சொல்லும் விஷயங்கள் தப்பாக செல்வது போன்ற விஷயங்களை இதுவரை சந்தித்திருப்பீர்கள்.
ஆரோக்கியம்
சந்திர கிரகணத்துக்குப் பிறகு தலை பாரம், தலையில் நீர்கோர்த்தல் பாதிப்பு ஏற்படும். சளி தொந்தரவு உண்டாகும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மேலதிகாரிகளாக இருப்பவர்கள், உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனம் தேவை. சேரக்கூடாத கிரகங்கள் என்றால் சந்திரன் ராகு என்பதால் வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பயணங்களில் கவனம்
நண்பர்களுடன் சுற்றுலா செல்வது, கோயிலுக்குச் செல்வது போன்ற பயணங்களின் சமயத்தின்போது விபத்துகள் வரும் வாய்ப்புள்ளது. கிரக நிலைகள் எதுவும் உங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த காலகட்டத்தில் கொகேசுப்பிரமணிய சுவாமியை மனதார வழிபாடு செய்வது நல்லது. இல்லையெனில் அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
வழிபாடு, பரிகாரம்
வீட்டில் இருக்கும் சிவலிங்கத்துக்குப் பூஜிப்பது, அபிஷேகம் செய்வது பாதிப்புகளை போக்கும். ராகு கேது, ஆதிசேசன், வாசுகி, முருகப் பெருமான் சேர்ந்தது கொகேசுப்பிரமணிய சுவாமி கோயில். சுவாமியின் படத்தை வைத்து வழிபடுவது, மொபைல் போனில் வைத்து வழிபாடு செய்வது கூட நன்மை பயக்கும். அருகில் இருக்கும் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் கொடுக்க கொடுக்க உங்களுக்கு வரும் பிரச்சனைகள் அனைத்தும் பனிபோல விலகும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications