Chandra Grahan 2025: மகர ராசிக்கு காத்திருக்கும் அபாயம்.. உங்கள் துணைக்கு வரப்போகும் பெரிய பிரச்சனை
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்த சந்திரகிரகணத்தால் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவுக்கு புண்ணியம் கிடைக்கும்.
5 ராசியினர் கவனம்
முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதனால், மன சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அழுத்துவது போன்று இருக்கும். 40 நாட்களுக்கு இதுபோன்ற நிலைமையே தொடரும்.
யோகம் பெறும் ராசி
இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
இந்த சந்திரகிரகணத்தால் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசி, லக்கினக்காரர்களுக்கு 2 ஆம் இடம் எனும் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ராகுவும், குருவும் சேர்ந்திருக்கின்றனர். ஏற்கனவே சொத்தையாக இருந்த பற்களை விட்டிருப்பீர்கள் இப்போது அதனால் நிறைய பற்கள் பாதிக்கப்பட்டிருக்கும். நிறைய பேருக்கு வேர் சிகிச்சை, முகத்தை மாற்றும் அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை, ஹார்மோன் சமநிலையற்ற தன்மை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வாழ்க்கை துணைக்கு பிரச்சனை
குடும்ப ஸ்தானத்தில் இந்த ராகு, சந்திரன் ஆகிய கிரகங்கள் இணைந்து கிரகணத்தைக் கொடுக்கும்போது வாழ்க்கைத் துணையின் மறைமுகமான இடங்களில் பாதிப்புகள் வரும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். மருத்துவ சிகிச்சை பெறும் சூழல் வரும். அதற்காக சேர்த்து வைத்த பெரிய பணத்தை இழப்பது போன்றவை உண்டாகும்.
பரிகாரம், வழிபாடு
ருத்ரனுக்கு அபிஷேகம் செய்வது உங்களை பாதிப்பில் இருந்து காக்கும். ருத்ரம் நமகம், சமகம் இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல நன்மைகள் கிடைக்கும். எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பெரியவர்களின் பாதத்தை தொட்டு வழிபடுவது நல்லது. பெரியவர்களின் பாதத்துக்கு பூஜை செய்வது கும்பத்துக்கும், மகரத்துக்கும் நல்ல பலன்களையும் பெரிய மாற்றங்களையும் தரும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications