Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandra Grahanam: குருவின் அருளால் கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. சொந்த வீடு வாங்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் கன்னி ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse].

2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.

lunar-eclipse-what-kind-of-benefits-will-get-kanni-rasi-people-during-this-chandra-grahan

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.

பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகிய 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று கன்னி ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கன்னி (Kanni Rasi Palan)

கன்னி ராசியினருக்கு 12 ஆம் இடமான சிம்ம ராசியில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் உங்கள் ராசிக்கு 6 ஆவது இடத்தில் சூரியன், செவ்வாய், ராகு, புதன் ஆகிய கிரகங்களும், ராசிக்கு 7வது ஸ்தானத்தில் சுக்கிரன், சனி, 10 ஆம் இடத்தில் குரு, 12 இல் சந்திரன் கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. பல கன்னி ராசியினருக்கு வெளிநாட்டுக்குச் சென்று படிக்கக்கூடிய யோகம் ஏற்படும்.

வெளிநாடு வாய்ப்பு

கன்னி ராசி மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு கிரகணத்திற்குப் பிறகு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆர்டிபீசியல் இன்டெலிஜன்ஸ் படிப்பது முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஆறாம் இடத்தில் புதன், ராகு அமைப்புள்ளதால் கம்யூனிகேஷன் தொடர்பான படிப்புகள் பெரிய வெற்றியைத் தரும்.

பகை வரும்

இந்த காலகட்டத்தில் தந்தையுடன் சிலருக்கு பகை ஏற்படும். சிலருக்கு அரசுத் துறையில் வேலை கிடைக்கும் அமைப்பு உள்ளது. சக ஊழியர்களுடன் கருத்து மாறுபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது. 7 ஆம் இடத்தில் சுக்கிரன், சனியின் அமைப்பானது கன்னி ராசிக்கு திருமண யோகத்திற்கான அமைப்பு உள்ளது பலருக்கு கலப்புத் திருமணம் அமையக்கூடிய யோகம் உள்ளது. வயது வித்தியாசம் அதிகளவில் இருக்கும்.

பிரச்சனைகளில் கவனம்

கன்னி ராசிக்கு மறைவு ஸ்தானத்தில் சந்திரனும், கேதுவும் இருப்பதால் உடல்நலனில் பிரச்சனை இருந்து கொண்டே இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. 5க்கு உரிய சனி 7 ஆம் இடத்தில் சுக்கிரனோடு இணைந்து இருக்கிறார். பலருக்கு காதல் விஷயங்களில் சில கசப்பு உணர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு காதலில் வெற்றியும் ஏற்படும். காதலில் பலவகையான சோதனைகள் இருந்திருப்பவர்களுக்கு எல்லாம் இந்த கிரகணத்திற்குப் பிறகு நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

குரு பார்வை

குருவின் பார்வை 4 ஆம் இடத்தில் அமைவதால் பலர் சொந்த வீடு, சொந்த நிலம் வாங்கக் கூடியதற்கான யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு கடன் சுமை கூடக் கூடியதற்கான வாய்ப்பு ஏற்படும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

கிரகண நேரத்தில் நிறைய நன்மைகள் ஏற்படுவதற்கு நாகநாத சுவாமியை வழிபாடு செய்வது அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஓம் நாகநாதரே போற்றி என்ற மந்திரத்தைச் சொல்வது சகலவித நன்மைகளையும் ஏற்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+